PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM...GURUVE SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY & A DIVINE SKANDASHASHTI VIRADAM TOO .. MAY THE DIVINE BLESSINGS OF LORD MURUGA BRING HAPPINESS & PEACE AROUND YOU WITH HIS ETERNAL LOVE & STRENGTH .. " OM MURUGA "


 மலைக்குத் தெய்வமான குறிஞ்சிநாதனே !
அன்பர் குறைகளைப் போக்கும் குகப்பெருமானே !
மயிலேறும் மாணிக்கமே ! தயாபரனே ! 
முன்செய்த பாவத்திலிருந்து விடுவித்து வாழ்க்கைப்பயணத்திற்கு வழித்துணையாய் வந்தருள்வாயாக “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் கந்தசஷ்டி மூன்றாம் நாளாகிய இன்று உலகத்தின் புற இருளைப் போக்க நீலக்கடல்மீது சூரியன் உதிப்பது போல .. நம் அக இருளைப்போக்க நீலமயில்மீதமர்ந்து எமைக் காத்தருளும்படி கந்தப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாஸேநாய தீமஹி ! 
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத் !!
கந்தசஷ்டி விரதநாட்களில் ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் .. தனித்து .. விழித்து .. பசித்து இருக்கவேண்டும் .. உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும் ..
உணர்வுகளை அடக்கி .. உள்ளத்தை ஒருநிலைப்படுத்து கந்தப்பெருமானின் பெருமைபேசி இம்மைக்கும் .. மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறுபேறாக அமைகிறது ..
கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப்போருக்கு .. இச்சாசக்தி .. கிரியாசக்தி .. ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள்கிட்டும் .. சகலசெல்வங்களையும் .. சுகபோகங்களையும் தரவல்ல இந்த விரதம் புத்திரலாபத்துக்குரிய சிறப்பான விரதமுமாகும் ..
“ சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் “ என்பதற்கேற்ப கந்தசஷ்டியில் விரதமிருந்தால் 
“ அகப்பையாகிய கருப்பையில் “ கரு உருவாகும் என்பதும் .. 
“அகப் பை “ எனும் உள்ளத்தில் நல்ல எண்ணங்களும் 
“ பக்தி “ எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் என்பதும் மறைபொருள்களாகும் ..
முருகனை உளமாறத் துதித்து .. குறையாத பொருட்செல்வத்தைப் பெறுவீர்களாக ! 
“ ஓம் சரவணபவாய நமஹ ! சரணம் சரணம் ஷண்முகா சரணம் “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

Image may contain: 1 person

No comments:

Post a Comment