PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM..GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE SOMVAR VIRADAM TOO . MAY LORD SHIVA RELIEVE YOU FROM ALL SINS & EVIL FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM NAMASHIVAAYA "




” சிவாயநம வென்றாலே சிந்தை தெளியும் ! 
அவாவும் அகன்றே அழியும் ! 
சிவாயநம வென்னும் பெயரேதான் வெற்றிக்கடித்தளமாம் ! 
என்றும் துதிப்பாய் எழுந்து “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதமும் அனுஷ்டிக்கப்படுகின்றது 
இன்றையநாள் தங்களனைவருக்கும் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திட எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
சிவ விரதங்களுள் சோமவார விரதமும் மேலானதாகும் .. 
“ சோமன் “ என்றால் - உமையுடன் கூடிய சிவன் என்று பொருள் .. அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு .. சந்திரனுக்குரிய தினம் திங்கள் .. எனவே திங்கட்கிழமை சோமவாரம் என அழைக்கப்படுகிறது
திங்கட்கிழமைக்கு உரிய சந்திரன் மனோகாரகன் எனப்படுபவன் .. நமக்கு விளையும் நன்மைக்கும் தீமைக்கும் மனமே மூலகாரணம் .. மனம் கொண்டு விளைந்த அவலங்களுக்கு வருந்தி அவற்றிலிருந்து நாம் விலகுவதற்கே வழிபாடு ..
சோமவாரத்தில் சங்காபிஷேகத்தை தரிசித்தால் ஆயுள்விருத்தி உண்டாகும் .. தீராத நோய்களும் தீரும் துர்சக்திகள் நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கை ..
“ சங்கமத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோபரி!
அங்கலக்ஷ்ணம் மனுஷ்யாணான் ப்ரும்மஹத்தியாதிகம் தகேத் “
என்ற வேதவாக்கியத்தின்படி ஈசனுக்குச் செய்த சங்காபிஷேக தீர்த்தத்தைத் தெளித்துக் கொண்டால் பிரம்மஹத்தி தோஷங்களும் விலகிவிடும் என்பது நம்பிக்கை .. 
சோமவாரத்தில் பரமனை வழிபட்டு வரம் பல பெறுவோமாக ..
தென்னாடுடைய சிவனே போற்றி ! 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ! 
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி ! 
கயிலை மலையானே போற்றி ! போற்றி !
“ ஓம் நமசிவாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person, sitting


No comments:

Post a Comment