காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும் வாசியேழுடைய தேர்மேல் மகாகிரிவலமாய் வந்த தேசிகா ! எமை ரட்சிப்பாய் ! செங்கதிரவனே ! போற்றி ! போற்றி “
பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும் வாசியேழுடைய தேர்மேல் மகாகிரிவலமாய் வந்த தேசிகா ! எமை ரட்சிப்பாய் ! செங்கதிரவனே ! போற்றி ! போற்றி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சூரியபகவானுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சூரியபகவானைத் தரிசித்து அவரின் அருட்பெறும் கொடைக்கு நன்றி செலுத்தி மென்மேலும் அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெறுவோமாக ..
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே !
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !!
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !!
ஏழுவர்ண குதிரைகளில் ஏறி உயர்வு தாழ்வு பாராது நாம் உயிர்வாழ சக்தியையும் .. ஒளியையும் தந்து அருள்பவன் சூரியனே !
சூரியபகவான் ஆன்மாவைப் பிரதிபலிப்பவன் .. ஒருவருக்கு ஆத்மபலம் அமையவேண்டுமானால் சூரியபலம் ஜாதகத்தில் அமையவேண்டும் வேதங்களில் தலைசிறந்த மந்திரம் “காயத்ரி” அந்த காயத்ரி மந்திரத்துக்கு உரியவன் சூரியனே !
சுயநிலை .. செல்வாக்கு .. கௌரவம் .. ஆற்றல் .. வீரம் பராக்கிரமம் .. சரீரசுகம் .. நன்னடத்தை .. நேத்திரம் .. உஷ்ணம் .. ஒளி .. அரசாங்க ஆதரவு முதலியவற்றின் காரகன் சூரியன் .. அக்னியை அதிதேவதையாகக் கொண்டவன் .. கதிரவன் .. ரவி .. பகலவன் .. ஆதவன் என பலபெயர்களால் அழைக்கப்படுபவன் ..
சூரியன் தகப்பனைக் குறிக்கும் கிரகமாகவும் உத்திரம் உத்திரட்டாதி .. கார்த்திகை நட்சத்திரங்களுக்கு உரியவனாகவும் .. சிம்ம ராசிக்கு சொந்தக்காரனாகவும் .. உச்சவீடாக மேஷத்தையும்
நீச்சவீடாக துலா ராசியையும் உடையவன் என ஜோதிடநூல்கள் கூறுகின்றன ..
நீச்சவீடாக துலா ராசியையும் உடையவன் என ஜோதிடநூல்கள் கூறுகின்றன ..
வாழ்வில் வெற்றியடைய அனைவரும் விரும்புவார்கள் .. ஒருதனிமனிதன் வெற்றியடைய உடலை நலமோடும் .. மனதை வளமோடும் வைத்துக்கொள்ளவேண்டும் .. மனமும் .. உடலும் ஒருங்கிணைந்தால் தான் உடல் ஆரோக்கியமும் .. எடுத்த செயல்களில் வெற்றியும் கிட்டும் .. உடலுக்கு அடிப்படையான யோகாசன முறையையும் .. மனவளத்திற்கு அடிப்படையான சுவாசமுறையையும் இணைக்கும் வழிபாடே சூரியநமஸ்காரம் ..
அகத்தியமாமுனிவர் ஸ்ரீராமருக்கு உபதேசித்த மந்திரம் “ஆதித்யஹிருதயம்” எனும் மஹாமந்திரம் .. இந்த மந்திரம் சூரியபகவானை வழிபடும் மந்திரமாகும் .. ஸ்ரீராமபிரான் இலங்கை வேந்தன் ஸ்ரீராவணனை வெற்றிகொண்டதும் இம் மாமந்திரத்தால் .. அனைவரும் இதனை பாராயணம் செய்து வாழ்வில் அனைத்திலும் வெற்றிகொள்வீர்களாக !
“ ஓம் சூர்யாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment