PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM ...GURUVE SARANAM GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY & A DIVINE ASHTAMI THITHI TOO .. MAY LORD BHAIRAVA RELIEVE YOU FROM ALL NEGATIVE FORCES FROM YOUR LIFE & CHERISH YOU WITH ALL ROUND SUCCESS & A HEALTHY HAPPY LIFE .. " JAI SHREE BHAIRAVAAYA NAMAHA "


" விரித்த பல்கதிர்கொள் சூலம் வெடிபடு தமரும்கை !
தரித்ததோர் கோலகாலபைரவனாகி !
வேழம் உரித்து உமை அஞ்சக்கண்டு ஒண் திருமேனி 
வாய் விள்ளச்சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே திருச்சேறை ஸ்தலத்தில் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் தேய்பிறை அஷ்டமித் திதியாகிய இன்று .. காலபைரவருக்கு உகந்த நாளாகும் .. பைரவரைத் துதித்து தங்களனைவரும் அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெற்று .. பயம் நீங்கி நல்லாரோக்கியமும் வியாபாரத்தில் தனலாபமும் பெற்றிட பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் சூலஹஸ்தாய வித்மஹே ! 
ஸ்வர்ணவாஹனாய தீமஹி ! 
தந்நோ பைரவ ப்ரசோதயாத் !!
மனிதர்களின் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படுவது இயல்புதான் .. அப்படி நமக்கு ஓர் கஷ்டம் ஏற்படும்போது நாம் சோர்ந்து போகவேண்டாம் .. துவண்டு விடவும் வேண்டாம் .. சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவரை வழிபட்டு ஆபத்துகளில் இருந்தும் .. கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம் ..
பைரவர் சிவனின் 64 வடிவங்களில் மகாஞானியான ரௌத்ர தோற்றம் கொண்டவர் .. எல்லா சிவாலயங்களிலும் பைரவரே காவல் தெய்வமாகவும் இருப்பவர் .. ஆலயம் திறந்தவுடனும் .. இரவு கோவில் மூடப்படும் வேளையிலும் பைரவபூஜை செய்வார்கள் சிவன் சொத்துக்களை காவல் காக்கும் அதிகாரியும் இவரே ! நாயை வாகனமாகக் கொண்டு திகம்பரராக காட்சி தருபவர் .. சனீஸ்வரனின் குருவாகவும் .. காலத்தை கட்டுப்படுத்திடும் தேவராகவும் இருப்பவர் 
பன்னிரெண்டு ராசிகள் .. அஷ்டதிக்குகள் .. பஞ்சபூதங்கள் .. நவகிரகங்கள் என எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஆதி தெய்வம் பைரவர் .. அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும் சுக்கிரதோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார் ..
அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும் .. தடைகள் யாவும் விலகும் .. ஏழரைச்சனி .. அஷ்டமச் சனியாவும் பைரவ வழிபாட்டால் நன்மையாக முடியும் .. தாமரை .. வில்வம் .. தும்பை செவ்வந்தி .. சந்தனமாலைகள் பைரவருக்கு விருப்பமானவை .. பரணி நட்சத்திரக்காரர்கள் இவரை
வணங்கினால் நல்லது .. அவரும் பரணியில் அவதரித்தவரே !
“ ஓம் பைரவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 Image may contain: 1 person


No comments:

Post a Comment