SWAMY SARANAM....GURUVE SARANAM....






ஒன்றை உணரா மனதிலே
நின்று போகும் ஆவலே
ஒன்றை உணர்ந்த பின்னிலே
வந்திடாதோ காவலே
கன்றை காக்க ஓடியே
வந்து தாங்கும் தாயைப் போல்
ஒன்றில் கலந்த மனதையே
நின்று தாங்கும் ஒன்றுமே 
அன்று போகும் சலனமும்
தீர்ந்திடாத துயரமும்...
சென்று ஒன்றில் கலந்ததால்
என்றும் உண்டு நன்மையே
ஒன்று நீயே என்பதால் 
ஒன்றி மனதில் வேண்டியே 
உன்னை இங்கு போற்றுவோம்
சரணம் என்று சொல்லுவோம்
சகலத்தீமை வெல்லுவோம்
பாலகன் நாமம் சொல்லியே
பாவ வினைகள் நீக்குவோம் 

No comments:

Post a Comment