SWAMY SARANAM.....GURUVE SARANAM SARANAM....






நாள் ஒவ்வொன்றும் நலம் பெறச் செய்தாய்!
 நன்மை தர அய்யனே நீ அன்பைப் பெய்தாய்!
கோளுக்கஞ்சா மனம் தனைத் தந்தாய்
கொடுங்கூற்றுக்கே ஐயன் கட்டளை வகுத்தாய்
 
இருவேளை உனை வணங்கச் செய்தாய்
எம்மதமும் சம்மதம் என்று மொழிந்தாய்
வாளினை ஒத்த நாவடக்கச் சொன்னாய்
வாழுகின்ற உயிரனைத்திலும் 
நேசம் வைக்கச் சொன்னாய்
மீளாத துன்பங்கள் மாற்றியே சென்றாய்
தாளாத சோகம்தனை சடுதியில் போக்கினாய்
கேளாத செவிப்பலன் கேட்டிடச் செய்தாய்
காணாத கண்களைக் காணச் செய்தாய்
பேசாத மொழியெல்லாம் பேசிட வைத்தாய்
மீண்டும் பிறப்புண்டேல் உன்
பாதம் தொழும் வரமே தருவாய்
பன்வேல் குடிகொண்ட என் குரு நாதனே!!


No comments:

Post a Comment