SWAMY SARANAM.....MALA DHARNA AT CHENNAI.....25-11-2017










தனித்திருக்கும் தவப்பொருளே
தனியானதொரு அரும்பொருளே
தண்மையான திருவருளே
தணிப்பாயெம் குறையிருளே!
கனிந்திருக்கும் ஞானக்கனியே
கனத்திருக்கும் வேதநிதியே
கணையொத்த பேரறிவே
குணக்குன்றே கற்பகதருவே!
விரிந்திருக்கும் மெய்ப்பொருளே
விரைந்திருக்கும் திருபதங்களே
விழைந்திரங்கும் கருணைவிழிகளே
விழாதுதாங்கும் திருகரங்களே!
சரணம் சரணம் ஐய்யப்பா  எனும் உயர் நாமம்
தினம் பாடியே இங்கு உயர்வோம் நாமும்!
சுவாமி சரணம்  என்று இனியேனும்
தினம் துதித்து வளர்வோம் மேன்மேலும்!!

No comments:

Post a Comment