SWAMY SARANAM....GURUVE SARANAM








எவ்வளவு பெரிய வலியை
ஒரு நொடியில் போக்கினாய்
உண்மை எது பொய் எதுவென
கண் முன் காட்டினாய்
உன் பிள்ளைகளைக் காப்பதில்
உனக்கிணை உண்டோ
சற்றுமே கலங்காத
உறுதியினைத் தந்தாய் 
குருவின் பூஜையிலே
குழந்தை பாலகனாய்
நீயிருக்க தவிப்பதெதற்கு
ஓயாமல் உனை நினைக்க
ஓடிடுமே துன்பம்
காவலாய் நீயிருக்க
கவலைகள் ஏது
கண்கண்ட தெய்வமே
பன்வெல் குடிகொண்ட பாலகனே

No comments:

Post a Comment