” எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ !
சிந்தா குலமானவை தீர்த்தனையாள் கந்தா கதிர்வேலவனே ! உமையாள் மைந்தா ! குமரா !
மறை நாயகனா “
சிந்தா குலமானவை தீர்த்தனையாள் கந்தா கதிர்வேலவனே ! உமையாள் மைந்தா ! குமரா !
மறை நாயகனா “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் செவ்வாய்க்கு அதிபதியாம் அழகிய வேலாயுதத்தினை கரத்தில் ஏந்தியவரும் திரிபுரமெரித்த சிவனாரின் மகனுமாகிய கந்தப்பெருமானை போற்றித் துதித்து தங்களனைவரது அனைத்து கிரகதோஷங்களும் நீங்கி ஆனந்த வாழ்வுதனை தந்தருள்வானாக ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
ஓடுகின்ற ஆறு இருந்தும் நாம் குளிக்காமல் இருக்கலாமா..? நாம் ஆற்றில் குளித்தால் ஆற்றுநீர் எம் உடம்பில் உள்ள நோய்களைக் குணப்படுத்துவதுடன் .. உடம்பில் உள்ள அழுக்குகளை நீக்கி எம் உடலைத் தூய்மைபடுத்துகின்றது .. அதுபோல் நாம் சரவணப்பொய்கையில் அவதரித்து அம்பிகையிடம் சக்திவேல் பெற்ற ஞானவேலனை வணங்கினால் அவரின் கருணையினால் எமது உயிர்மீது படிந்துள்ள
(அழுக்குகள்) கன்மவினைகள் நீங்கப் பெற்று ஆன்மா தூய்மை பெறுகின்றது ..
(அழுக்குகள்) கன்மவினைகள் நீங்கப் பெற்று ஆன்மா தூய்மை பெறுகின்றது ..
எனவே “ யாம் இருக்க பயம் ஏன் “ என எம்முன்னே தோன்றி எம் துயர்துடைக்கும் ஆறுபடைவீடுகளில் உறையும் ஆறெழுத்து கூறும் அன்பர் நெஞ்சில் நிறையும் ஞானவேலாயுதனை இன்றைய நாளில் வழிபட்டு இஷ்ட சித்திகளைப் பெற்று உய்வோமாக !
“ ஓம் சரவணபவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment