PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY & A DIVINE PURNIMA TOO .. " ANNAABISHEKAM " IS HELD ONLY ONCE A YEAR ON THE FULL MOON DAY OF NOVEMBER .. THIS SIGNIFIES HOW IMPORTANT ANNAM IS FOR HUMANITY & HOW IMPORTANCE FOR US TO UTILIZE ANNAM WITHOUT WASTAGE .. THE PEOPLE WHO BELIEVE THAT GOD IS THE CREATOR OF FOOD & LIFE & TO SHOW THE GRATITUDE FOR THE BOUNTY THEY RECEIVED .. STAY BLESSED .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH .


” அன்னபூர்ணே ! சதாபூர்ணே ! 
சங்கர பிராண வல்லபே ! 
ஞான வைராக்கிய சத்யர்த்தம் 
பிக்ஷாம் தேஹி ச பார்வதி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ஐப்பசி பௌர்ணமித் திதியாகிய இன்று (மதியத்திலிருந்து நாளை மதியம்வரை பௌர்ணமி)
கல்லுக்குள்ள தேரைக்கும் .. கருப்பைக்குள்ளே இருக்கும் உயிர்க்கும் உள்ளுணர்வைத் தருபவன் தயாபரன் சிவனே ! அந்த லிங்கத் திருமேனியனுக்கு ஆண்டுதோறும் இந்நாளில் “அன்னாபிஷேகம்” அனைத்து சிவாலயங்களிலும் நடைபெறும் .. தங்களனைவரும் சிவாலயம் சென்று உச்சிகால பூஜையின்போது சிவதரிசனம் செய்து கோடி சிவதரிசனம் செய்த பேற்றைப் பெற்று நீண்ட ஆயுளும் .. நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறவும் எல்லாம் வல்ல ஈஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
உயிர் வாழ்தலுக்கு ஆதாரமானது அன்னம் .. அதுவே பிரம்மா .. விஷ்ணு .. சிவ வடிவம் என்கிறது வேதம் .. சாமவேதம் - “அஹமன்னம் ! அஹமன்னதோ “ என்கிறது .. அதாவது பரம்பொருளே ஜீவன்களுக்கு உயிர்நாடியான உணவாக .. அன்னமாக விளங்குகிறார் என்று அர்த்தம் ..
அமுது அருளும் ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழாவே அன்னாபிஷேகம் ! சிவலிங்கத்தை அன்னத்தால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே “அன்னாபிஷேகம்” என்கிறோம் ..
இதை ஏன் ஐப்பசிமாத பௌர்ணமியில் செய்யவேண்டும் ? மற்ற மாதங்களில் செய்யலாமே என்று கேட்போரும் உளர் .. ஐப்பசி மாத பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு .. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாக நீங்கப்பெற்று பதினாறு கலைகளுடனும் .. முழுப்பொலிவுடனும் திகழ்கிறான் .. ஐப்பசியில் தான் நிலவு பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானியல் ..
நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி 
இதனை உணர்ந்த ரிஷிகள் ஐப்பசியில் அன்னாபிஷேகம் செய்வது தான் சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைபடுத்தினர் ..
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் .. தீ எரிகிறது .. 
தீயில் நீரும் .. நீரில் நிலமும் பிறக்கின்றன .. நிலத்தில் விளைந்த அரிசி .. நீரில் மூழ்கி .. தீயால்வெந்து அன்னமாகிறது .. எனவே அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை .. 
அபிஷேகத்தின்போது ஆண்டவனை முழுவதுமாக அணைத்துக்கொள்கிறது .. அவனிடமே அடைக்கலமாகிறது .. எனவே இதன்மூலம் ஐம்பெரும் பூதங்களும் ஆண்டவனிடம் அடைக்கலம் என்பதும் தெள்ளத் தெளிவாகிறது .. 
“ தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவனே சிவலிங்கம் “ என்கிறார் திருமூலர் ..
ஓர் தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது .. உணவுக்கும் .. உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு .. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது .. சிலர் சாப்பிடும்போது 
“ இது எங்க சமைத்தது போன்று உள்ளது “ என்று பெருமைப்படுவதுண்டு .. 
“ அன்னையோடு அறுசுவை உண்டிபோம் “ என்று அறுசுவை உணவுக்கும் அம்மாவிற்கும் உள்ள தொடர்பினை பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார் ..
எனவேதான் அம்மையப்பராக இருந்து உலகைக்காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம் .. இந்த அன்னத்தை தீபாராதனை செய்தபின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது .. மீதியை நீர்நிலைகளில் கரைக்கப்படும் .. அவை மீன்போன்ற நீர்வாழ் உயிரினங்களுக்கும் உணவாக்கப்படும் .. அன்னத்தை வீணாக்கக் கூடாது .. அது தெய்வ சொரூபம் என்பதனை மக்களுக்கு உணர்த்தவுமே அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது ..

அன்னாபிஷேகத்தில் கலந்துகொண்டு அன்ன பிரசாதத்தை நாம் உட்கொள்ள அனைத்து பாக்கியங்களையும் நல்குவார் அந்த ஈஸ்வரன் .. 
“ ஓம் நமசிவாய “ .. 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


No automatic alt text available.



No comments:

Post a Comment