PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

Swamy Saranam...Guruve Saranam...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A BLESSED SOMVAR TOO .. MAY LORD SHIVA RELIEVE YOU FROM ALL SINS & PAINS FROM YOUR LIFE & SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH ..





” உலகௌயிர்க்கெலாம் விழியோய் போற்றி ! 
ஈறு நடுமுதல் ஆனோய் போற்றி ! 
இசைவல் காழியன் ஆண்டோய் போற்றி ! 
அகோரமுகந்தனை யுடையோய் போற்றி ! 
போற்றி ! போற்றி ! பரமா போற்றி ! 
சரணம் சரணம் சிவனே சரணம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது .. தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் வெற்றிமிகுந்த நன்னாளாக அமைந்திட எல்லாம் வல்ல ஈஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
சோமவாரம் என்பது வாரநாட்களில் திங்கட்கிழமையைக் குறிப்பதாகும் .. நவகிரிகங்களில் சந்திரபகவானுக்கு “ சோமன்” என்று பெயர் உண்டு .. சந்திரபகவானே இந்நாளில் விரதமிருந்து ஈசனின் அருள்பெற்றதாக ஐதீகம் ..
தட்சனின் சாபத்துக்குள்ளான சந்திரன் நாளுக்குநாள் தேய்ந்து வந்ததால் சாபவிமோசனம் பெற முனிவர்களின் ஆலோசனைப்படி சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதத்தை கடைபிடித்தான் .. இதனால் மனமகிழ்ந்த ஈசனும் சபித்தவன் மட்டுமே விமோசனம் அளிக்கவேண்டும் .. ஆயினும் சாபம் நீங்கும் வண்ணம் எமது திருமுடியில் சூடிக்கொள்கிறேன் .. ஒவ்வொரு திங்களுக்கும் (மாதத்திற்கும்) ஒருமுறை தேய்ந்து பின் வளர்வாய் என்று அருளினார் ..
எனவே சோமவார விரதத்தின் பலனால் சந்திரன் பிறைமுடியாய் ஈசனின் தலையில் அமரும் பாக்கியம் பெற்றான் .. சந்திரனும் சிவபெருமானிடம் ஒரு வேண்டுதலை வைத்தான் .. சோமவாரம் தோறும் பூஜைசெஉது சிவனை வணங்குவோருக்கு நற்கதியைத் தந்தருளவேண்டுமென்று .. அவ்வாறே வரமளித்து அருளினார் ஈசன் ..
அன்பர்களும் சோமவார தரிசனம் செய்து இறையருள் பெறுவீர்களாக ! 
சிவனைப் போற்றுவோம் ! சிவயோகம் பெறுவோமாக! 
“ ஓம் நமசிவாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

No comments:

Post a Comment