PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM..GURUVE SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY & A DIVINE SANKASHTI (SANKADAHARA SADURTHI) TOO .. MAY LORD GANESHAA REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & FULFILL ALL YOUR DESIRES TOO .. " JAI SHREE GANESHAAYA NAMAHA "


 


” அல்லல்போம் ! வல்வினைபோம் ! 
அன்னை வயிற்றிற் பிறந்த தொல்லைபோம் !
போகாத் துயரம்போம் ! நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் செல்வக் கணபதியைக் கைதொழுதக்கால் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் செவ்வாய்க்கிழமையும் .. சங்கடஹர சதுர்த்தியுமாகிய இன்று .. விண்ணுக்கும் .. மண்ணுக்கும் நாயகனாம் முக்கண்ணன் கணபதியைத் துதித்து நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி அளவில்லாத நன்மைகளை தங்களனைவருக்கும் தந்தருளும்படி ஸ்ரீவிக்னவிநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
ஒவ்வொருமாதமும் பௌர்ணமிக்கு அடுத்துவரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும் .. இது இருள்சூழும் மாலைநேரத்தில் வரும் .. நமக்கு வரும் துன்பங்களை .. தடைகளை .. கஷ்டங்களை தேய்த்து அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்புமிக்க விரதமாகும்
சங்கடம் என்றால் - தொல்லைகள் .. கஷ்டங்கள் .. தடைகள் என்று அர்த்தம் .. 
ஹர என்றால் - நீக்குவது என்று பொருள் .. 
சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள் .. தோஷங்களை போக்கக்கூடியவர் .. சந்திரபகவானும் தனது தோஷங்கள் நீங்கவும் .. தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீவிநாயகப் பெருமான நினைந்து கடும் தவம் செய்ய சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார் ..
ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம் .. கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம் .. மாங்கல்ய தோஷம் .. புத்திரதோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர் ..
இந்த விரதத்தை அங்காரகன் என்னும் செவ்வாய் நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை பெற்றான் எனவே செவ்வாய்கிழமைகளில் வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று போற்றப்படுகிறது .. இன்றையதினம் விநாயகரை வழிபடுவதால் அங்காரகனுடைய அருளையும் பெறலாம் ..
விக்னவிநாயகரைப் போற்றுவோம் ! என்றும் எமை காத்தருள்வானாக ! 
“ ஓம் ஸ்ரீகணேஷாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ...
No automatic alt text available.

No comments:

Post a Comment