SWAMY SARANAM... GURUVE SARANAM....WISH YOU ALL A BLESSED SATURDAY & A DIVINE " SHANI MAHA PRADOSHAM" TOO .. MAY LORD SHIVA RELIEVE YOU FROM SINS & ALL THE NEGATIVE FORCES & SHOWER YOU WITH GOOD LUCK GOOD HEALTH & HAPPINESS .. " OM NAMASHIVAAYA "


” அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு 
மஃதறிவீர உய்வினை நாடாதிருப்பது முந்தமக் கூனமன்றே ! கைவினைச் செய்தம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்! செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறாதிரு நீலகண்டம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சிவமூர்த்திக்கு உகந்த விரதங்களுள் துன்பத்தை நீக்கி 
இன்பத்தை நல்கும் சனிக்கிழமை மஹாபிரதோஷமாகிய இன்று சிவனைத் துதித்து தங்களனைவரது துன்பங்கள் யாவும் களைந்து பாவங்கள் போக்கி .. ஒளிமயமான வாழ்வுதனை தந்தருளுமாறு எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
பிரதோஷ வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய சிறப்புமிக்க வழிபாடாகும் .. 
“ தோஷம் “ - என்ற வடமொழிச் சொல்லிற்கு - குற்றம் என்று பொருள் ..
“ பிரதோஷம் “ - என்றால் குற்றமற்றது என்று பொருள் 
குற்றமற்ற இந்தப் பொழுதில் (மாலை 4.30 - 6.00 மணிவரை) ஈசனை வழிபட்டோமேயானால் நாம் செய்த சகலபாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம் ..
பிரதோஷகாலம் சூரிய அஸ்தமனத்தோடு தொடங்குகிறது . இவ்வேளை பரமேஷ்வரனைத் தியானம் செய்வதற்குத் தகுந்த காலமாகும் .. உலகம் ஒடுங்குகிறது .. மனம் எல்லாம் வல்ல ஈஸ்வரனிடம் ஒடுங்க .. அனைத்து தோஷங்களும் ஒடுங்கும் .. அதுவே பிரதோஷ மகிமை ..
இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்திதேவருக்கும் அபிஷேகம் நடைபெறும் .. நந்திதேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கூடாக சிவதரிசனம் செய்ய அனைத்து தோஷங்களும் நீங்கி நன்மை உண்டாகும் ..
வில்லைவிட்டு அம்பு சென்றுவிட்டாலும் மந்திர உச்சாரண பலத்தால் அந்த அம்பை உபசம்ஹாரம் செய்வதுபோல ஈஸ்வரன் தான் விட்ட சக்தியை எல்லாம் தன் வசப்படுத்திக் கொள்கிறார் .. உலக சக்தி முழுவதும் தன்வசம் ஒடுக்கிக்கொண்டு நர்த்தனம் செய்யும் இவ்வேளையில் ஈசனை பிறையணிந்த பெருமானாகவும் .. ஈஸ்வரியோடும் ..முருகனோடும் சோமஸ்கந்த மூர்த்தியாக தரிசித்து வாழ்வில் சகல நலன்களையும் பெறுவோமாக ..
அலுவலக பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில் 
(மாலை 4.30 - 6.00) ஒருவிநாடியேனும் 
“ஓம் நமசிவாய “ என்று மனதளைலேனும் நினைத்துக்கொள்வீர்களாக . என்றும் ஈசனின் அருள் தங்களனைவருக்கும் கிட்டுவதாக் .
“ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் . என்றும் நலமுடனு
Image may contain: 1 person


No comments:

Post a Comment