" அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்பா ! நிகர் இல் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே !
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே ! புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே “
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே ! புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் பிறவித் துன்பத்தினை துடைக்கவல்ல பரந்தாமனை அருள்மழை பொழியும் “வைகுண்ட ஏகாதசி” நன்னாளாகிய இன்று .. தங்கள் இல்லறம் சிறக்கவும் .. துன்பமற்ற நல்வாழ்வு அமைந்திடவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
மார்கழி மாதம் வந்த உடனே திருமாலின் உன்னத கருணையைப் போல் நம் மனதைக் குளிரவைக்க வரும் விரதம் “ வைகுண்ட ஏகாதசி விரதமாகும் “ தேவர்களின் ”உஷக்காலம் ” எனப்படும் அதிகாலை நேரமாக இருப்பதால் நமது வாழ்நாளில் ஒருவருடம் தேவ வருஷத்தில் ஒருநாள் ஆகிறது ..
அதில் தைமுதல் - ஆனிமுடிய உள்ள 6 மாதங்களும் - பகல் என்றும் ..
ஆடிமுதல் - மார்கழி முடிய உள்ள 6 மாதங்களும் - ஒரு இரவு என்றும் கூறுவர் ..
இரவு காலத்தில் அதிக இருட்டும் .. மழையும் .. பனியும் .. குளிரும் மற்றும் பகல்பொழுது குறைந்தும் காணப்படுகின்றது ..

மார்கழி மாதத்தின் தேவ இருட்டுப் பொழுதில் அதாவது “உஷக்காலம்” எனும் அதிகாலை
4.00 மணிமுதல் - 6.00 மணி (பிரம்ம முகூர்த்தத்தில்)
உள்ள கால அளவில் வைகுண்ட வாசல் திறக்கப்படுகின்றது .. அவ்வேளையில் ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சியும் .. திருப்பாவையும் படித்து பரந்தாமனுக்கு பொங்கல் பிரசாதங்கள் நிவேதனம் செய்வார்கள் ..

தேவர்களின் உஷக்காலம் எனப்படும் அதிகாலை வேளையில் வைகுந்த வாசல்கள் திறந்தே இருப்பினும் பகவான் அதன் வழியாக வெளியே வந்து காட்சி தந்து கருணைமழை பொழியும் நன்னாளே வைகுண்ட ஏகாதசி .. இன்று அதிகாலையில் சொர்க்கவாசல் எனும் வடக்குவாசல் வழியாக வருகின்றார் .. (தெற்கே பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளார்) இந்நேரத்தையே நாம் சொர்க்கவாசல் திறப்பு விழாவாக கொண்டாடுகின்றோம் ..
அனைத்து ஏகாதசியிலும் விரதம் கடைபிடிக்க முடியாவிட்டாலும் வைகுந்த வாசல் திறக்கும் மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்றாவது உண்ணா விரதம் இருந்து இரவு கண்விழித்து விரதம் கடைபிடித்தால் மற்ற 24 ஏகாதசி விரத சிறப்புப் பலனும் சேர்ந்து கிட்டும் .. சுயநலமின்றி புண்ணிய காரியங்கள் செய்பவர்களுக்காக பரமபத வாசல் திறந்தே இருக்கும் ..
இன்றைய நாளில் விஷ்ணுபகவானின் பெருமையைக் கூறும் ஹரிகதைகளைக் கேட்பதும் .. படிப்பதும் சிறந்தது .. பகவானின் நாமத்தை உச்சரித்து நாராயணனின் அருட்கடாக்ஷ்த்தைப் பெறுவோமாக !
” ஓம் ஹரி ஓம் ! ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
” ஓம் ஹரி ஓம் ! ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment