SWAMY SARANAM.... GURUVE SARANAM...WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD BRIHASPATI .. MAY THE GOD OF WISDOM ENLIGHTEN YOUR LIFE & MIND & RELIEVE YOU FROM ALL THE NEGATIVE FORCES TOO .. " JAI SHREE BRIHASPATI DEV "


உத்தமனே ! உயர்ந்தவனே ! தத்துவத்தின் நாயகனே!
சித்தனே ! புத்திரருக்கு அதிபதியே ! பொன்மகனே ! நித்தம் பக்தியுடன் நின்பாதம் பணிவோம் ! ப்ரஹஸ்பதியே ! போற்றி ! போற்றி ! போற்றி !!
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் குருவருளும் .. இறையருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்று கிரகங்களுள் தலைமையானவரும் .. மற்ற கிரகங்களால் ஏற்படும் துன்பங்களை தனது பார்வை பலத்தால் போக்குபவராகிய ப்ரஹஸ்பதியைத் துதித்து தங்களனைவரது சகல கிரகதோஷங்களும் நீங்கப்பெற்று .. சுபீட்சமான வாழ்வுதனை பெற்றிட வியாழபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே ! 
க்ருணிஹஸ்தாய தீமஹி !
தந்நோ குரு ப்ரசோதயாத் !
அதிதேவதா ப்ரயத்யதி தேவதா தேவதா ஸஹித 
ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ !!
ஒருவரின் அதிர்ஷ்டநிலையின் அளவீட்டை நிர்ணயம் செய்வதும் குருவே ! இதுதவிர பொருளாதார உயர்வு .. பிறர் நம்மை மதிக்கும் நிலை .. புத்தியின் தெளிவு ஆகிய பல்வேறு விஷயங்களில் குருவின் பங்களிப்பு பெருமளவு உண்டு ..
கிரகங்களில் முழுமையான சுபக்கிரகம் குரு .. இவர் தேவர்களுக்கு பாடம் போதிக்கும் குருவுமாவார் .. எனவே இவரது பார்வை எந்த ராசியின் மீது பட்டாலும் எல்லாத் தோஷங்களும் நீங்கிவிடும் .. ஒருவருவருடைய ராசிப்படி ஏழரைச்சனி நடக்கிறது என்றால் அந்த ராசிக்கு குருபார்வை இருந்தால் கெடுதல் விளையாது என்பதையே .. 
“ குருபார்க்க கோடிநன்மை “ என்கிறார்கள் .. கோடி என்றால் அளவுகடந்த என்றும் பொருள் உண்டு ..
“ குரு இருக்கும் இடம் பாழ் .. பார்க்கும் இடம் விருத்தி “ என்றும் சொல்வார்கள் .. அதன்படி இவரது பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா அம்சங்களும் தேடிவரும் .. குருவுக்கு பல்வேறு ஆதிக்கம் உள்ளது .. சமூக அந்தஸ்து .. அரசியல் .. பதவி .. ஆன்மீக ஈடுபாடு 
தர்மகாரியங்கள் .. நற்பணி நிலையங்கள் .. தர்ம ஸ்தாபனங்கள் .. ஆதரவற்றோர் .. முதியோர் இல்லங்கள் அமைத்தல் .. பள்ளி .. கல்லூரி கட்டுதல் .. அறங்காவலர் பதவி .. நீதிபதி .. கவர்னர் போன்ற அரசு உயர்பதவியில் அமர்வதற்கு குருபகவானின் அருட்கடாக்ஷ்ம் தேவை ..
குருபகவானின் அருட்பார்வை கிடைக்க .. 
“ ஓம் பிம சிவய வசி குருதேவாய நமஹ “ என்று 108 முறை சொல்லி வரலாம் .. வியாழக்கிழமைகளில் தூபதீபங்கள் ஏற்றி மஞ்சள் நிற ஆடை அணிவித்து நறுமண மலர்களால் குருபகவானை அர்ச்சிப்பதோடு .. ஏழைகளுக்கு அன்னதானம் செய்து வருவோர் வாழ்நாள் முழுவதும் குருகடாக்ஷத்தால் எல்லா நற்பலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்வர் என்பது நிச்சயம் .. 
“ ஓம் ப்ரஹஸ்பதியே நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
Image may contain: one or more people, people standing and indoor

No comments:

Post a Comment