SWAMY SARANAM.. GURUVE SARANAM WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD VISHNU .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA "

  


மாதவனே மார்கழி ! 
மார்கழியே மாதவன் !
ஹரியே சரணம் ! 
ஹரனே சரணம் ! 
ஹரிஹர சிவமே சரணம் ! சரணம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காத்தருளும் ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த நன்னாளுமாகும் .. பகவானைப் போற்றித் துதித்து இன்றையநாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாகத் திகழவும் .. கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கிடவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
மார்கழி மாத நாட்கள் அனைத்தும் மிகவும் விசேஷமானவை .. நாள்தோறும் சைவ ஆலயங்களிலும் .. வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை .. ஆராதனை நடத்துவர் .. சிவாலயங்களில் திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சியும் .. விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும் ..
மார்கழி மாதம் தேவர்களுக்கு அருணோதய காலமாகிறது .. அதனால் இம்மாதம் முழுவதும் பகவானைத் தியானித்து அவரைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதும் நமக்கு சகலசௌபாக்கியங்களையும் அளிக்கின்றது ..
நாம் நமது மனதை தெளிவுபடுத்தி ஆன்மீக மார்க்கத்தில் லயிக்கச் செய்வதற்கு மார்கழி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது .. ஸ்ரீமன் நாராயணனின் 12 நாமங்களும் பன்னிரெண்டு மாதங்களாகக் கருதப்படுகின்றன ..
1 - கேசவா 
2 - நாராயணா 
3 - கோவிந்தா 
4 - மாதவா 
5 - மதுசூதனா 
6 - விஷ்ணு 
7 - த்ரிவிக்ரமா 
8 - வாமனா 
9 - ஸ்ரீதரா 
10 - ரிஷிகேசா 
11 - பத்மநாபா 
12 - தாமோதரா
இதில் முதல் நாமமாக விளங்கும் “கேசவா “ என்பது மாதங்களுக்கு மணிமகுடமான “மார்கழியாக” விளங்குகிறது .. ஆன்மீக மார்க்கத்திற்குச் செல்ல தலையான மாதமாகக் கருதப்படும் இம்மார்கழி மாதத்தை “மார்கசீர்ஷம்” என்பர் .. நாளடைவில் மருகி “மார்கழி” என்றானது ..
இம்மாதத்தில் மாதர்கள் வைகறையில் துயிலெழுந்து வீட்டிற்கு முன்னால் கோலமிட்டு சாணத்தினைப் பிடித்துவைத்து அதன்மீது பூசணிப்பூவை மகுடம் வைத்தாற்போல் அழகுற வைப்பர் .. அதனைச் சுற்றி விதவிதமான வகையில் வண்ண வண்ணப்பூக்களை கண்ணைக்கவரும் வண்ணம் அழகாக அடுக்குவர் .. இவ்வாறு வாயில் முன்புறத்தை அழகுற அலங்கரிக்கும் பழக்கம் பண்டு தொட்டே நிலவி வருகின்றது .. அதற்குக் காரணமான முக்கிய பாரதக்கதையும் உண்டு ..
பாண்டவர்களுக்கும் .. கௌரவர்களுக்கும் போர் நடந்தது மார்கழி மாதமே ! யுத்தத்தில் பாண்டவர்களில் மாண்டவர் சிலர் .. மீண்டவர் பலர் .. பாண்டவர்களின் வீட்டை அடையாலம் கண்டுகொள்வதற்காகவேண்டி வியாசர் வீட்டு வாயிலில் சாணம் இட்டு ஊமத்தம் பூ வைப்பதற்கான ஏற்பாடு செய்தாரம் .. அந்த அடையாளத்தைக் கொண்டு யுத்தகாலத்தில் பாண்டவர் சேனைகளின் வீடுகளை கௌரவர்களின் தாக்குதல் ஏற்படாமல் கண்ணன் பாதுகாப்பு கொடுத்து காப்பாற்றினார் .. அன்றுமுதல் இந்தப் பழக்கம் தொடர்ந்து வர ஆரம்பித்தது ..
இந்த மார்கழியில் இறைவனை மனதால் துதித்துப் போற்றுங்கள் .. அனைத்து நலன்களையும் பெறுவீர்களாக .. 
“ ஓம் நமோ நாராயணாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
Image may contain: 1 person, indoor

No comments:

Post a Comment