PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM...GURUVE SARANAM....WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD MURUGA .. MAY HE RELIEVE YOU FROM ALL THE NEGATIVE FORCES & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & GOOD LUCK .. " OM MURUGA "


” முருகா ! என் கண்கள் காண்பதாக இருந்தால் உன் திருவடித் தாமரைகளையே காணட்டும் !
என் உதடுகள் உந்தன் திருப்புகழை மட்டுமே பாடட்டும்
இரவும் பகலும் என் மனம் உன் பெருமையை மட்டும் சிந்தித்திருக்கட்டும் ! 
இந்த அரிய பெரும் வரத்தை நீ தந்தருளவேண்டும் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
செவ்வாய்க் கிழமையாகிய இன்று .. செவ்வாய்க்கே அதிபதியாகிய கந்தப்பெருமானைப் போற்றித் துதித்து மனநலமும் .. உடல்நலமும் நல்லாரோக்கியமாகத் திகழவும் .. கிரகதோஷங்கள் நீங்கி நிம்மதியான வாழ்வுதனை பெற்றிடவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
வேதங்களே மயிலாகி ஞானவடிவேலனைத் தாங்குவதாக வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது .. 
“ வேலும் மயிலும் “ என்ற தமிழ் மந்திரத்தில் மயில் இடம் பெற்றுள்ளது .. 
“ வேலுண்டு வினையில்லை ! மயிலுண்டு பயமில்லை “ என்பது முருகனடியார்களின் அருள்வாக்கு ..
முருகனை நம்பிக்கையுடன் வணங்கிட புனித கங்கை போன்று ஆறாக அருள்மழை பெய்து அவகுணங்களை அடியோடு அழித்து .. ஞானானந்த பிரகாசத்தில் ஆழ்த்தி முக்திக்கு எய்துவிடுவான் என்பதனை உணர்ந்து 
“ குகமயமாக ! ஸர்வம் குஹமயத் ஜகத் “ என வழிபடல் வேண்டும் ..
முருகனைப் போற்றித் துதிக்க எத்தனையோ கவசங்கள் உள்ளன .. ஆனால் கோடிக்கணக்கான பக்தர்களின் நாவில் விளையாடுவது கந்தசஷ்டி கவசமும் மற்றும் சுப்ரமண்ய கவசமுமாகும் .. இந்த கவசத்தை எந்த அளவுக்கு மனம் உருகி பாராயணம் செய்கின்றோமோ அந்த அளவுக்கு முருகன் திருவருளால் நம் வாழ்வில் எல்லா வளங்களும் கிட்டும் .. நம் உள்ளத்தை கவரும் பண்புடையான் என்பதனை உணர்ந்து அவன் பொற்பாதங்களில் சரணடைவோமாக !
“ ஓம் சரவணபவாய நமஹ் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

No comments:

Post a Comment