POOJA AT SEETHAPATHI SWAMY RESIDENCE...SWAMY SARANAM...GURUVE SARANAM




























 சங்கடமின்றி நான் வாழ்வது பாலகனின் நிழல்
சலியாது நான் துதிப்பேன் சந்ததமும் அவர் கழல்
பங்கமின்றி வந்துதித்த எங்கள் அற்புதக் குரு
பாவங்களை நிவர்த்தி செய்யும் அதிசயக் கரு
பன்வேல் பாலகன் ஆட் கொண்ட முக்திக்குரு

அற்புதங்கள் செய்திடுவார் எங்கள் குரு
அரியணைமேல் ஏற்றிடுவார் பாலகனை தினம்தினம்
சித்துபல செய்திடும் அவர் அலங்காரம்
சீதாபதிசுவாமி இல்லத்திலே கண்டோமே ஐயன் அவன் சிருங்காரம்
சிந்தையிலே(அவர்) உத்தித்துடுமே தினந்தோறும்
சிறியேன் தேடுகின்றேன் அவன் பாதம் தினந்தோறும்
மந்தைகள் கூட்டமானோம் அவரின்றி நாம்
மகத்துவம் அறிந்து சொன்னோம் அய்யனே சரணம் என்று
முந்தய வினையகற்றும் குரு இவர் காண்
முக்திபெற வணங்கிடுவோம் குரு அவர் பாதம்










No comments:

Post a Comment