என்னுக்குள் உயிரான பாலகனே
என் எண்ணத்தில் கலந்திட்ட குருநேசனே
மண்ணக அரசாள வந்த மணிகண்டனே
மாளிகைப்புரம் சாந்தியின் வீட்டில் வந்தமர்ந்த என் நேசனே
அம்பாரியின் மீதமர்ந்து நீ காட்சி தந்தாய்
அச்சங்கள் போக்கி அமைதி தந்தாய்
குருவின் கைஜோதியிலே நீ வந்தமர்ந்தாய்
சின்முத்திரையோடு நீ காட்சி தந்தாய்
துன்பங்கள் பறந்தோடும் உன் காட்சியினால்
கண்கள் மூடி உனைத் தியானிக்கவே
உள்ளத்தில் நீ உறைந்தருள் செய்வாய்
கன்னத்தில் வழிந்தோடும் சுடுநீரின்
கோடுகள் காயுமுன்பே
அடியேனை கண்டிட நீ வந்திடுவாய்
அடியேன் கைபிடித்து பெரும்பாதை கடத்திடுவாய்
பொன்மனம் கொண்ட என் பாலகனே
எம் மனம் கொள்ளை கொண்ட குருநேசனே
என்றும் எனை நீ காத்து அருள்வாய்
No comments:
Post a Comment