PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM GURUVE SARNAMGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY & A DIVINE KUMAARA SHASHTI VIRADAM TOO (20TH DAY) MAY LORD GANESHAA BESTOW YOU WITH ETERNAL BLISS .. PEACE & CONTENTMENT .. " JAI SHREE GANESHAAYA NAMAHA "



” மொழியின் மறைமுதலே ! முந்நயனத்தேறே ! 
கழியவரும் பொருளே ! கண்ணே ! செழியகலாலயனே
எங்கள் கணபதியே ! நின்னை அலாலயனே சூழாதென் அன்பு “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
விநாயக சஷ்டி விரதம் 20ம் நாளாகிய இன்று தங்களனைவருக்கும் இந்நாள் ஓர் பொன்னாளாக மிளிரவும் .. வாழ்வில் நல்லதே நடக்க .. நானிலம் சிறக்க .. மனிதநேயம் செழிக்க விக்னவிநாயகரைப் பிரார்த்தனை செய்வோமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
அன்னை ஒளவை விநாயகரின் பேரருள் பெற்று மன உரம் மிக்கவர் .. அஞ்சாமை .. வைராக்கியம் .. ஈரம் .. இரக்கம் .. சொல்வன்மை .. இறைவனின் திருவருள் .. அற்புத ஆற்றல்கள் .. சித்திகள் ஆகியவற்றைக் கொண்டவர் .. எளிமையின் சின்னம் .. ஏழியின் தோழி 
பொன்னுக்கும் .. புகழுக்கும் பெரும்பான்மையான புலவர்கள் பாடிவரும்போது .. கூழுக்கும் பாடியவர் ..
இனி விநாயகப் பெருமானின் அழகையும் .. பெருமைகளையும் அற்புதமான விளக்கத்துடன் அன்னை ஒளவையாரால பாடி அருளப்பட்ட 
விநாயகர் அகவலின் “இறுதி” பாகத்தையும் படித்து அன்னையின் திருவருளையும் .. அளவில்லாத ஆனந்தத்தையும் .. கேட்டவரத்தை கேட்டவாறே தந்தருளும் கணபதிப் பெருமானின் அருட்கடாக்ஷ்த்தையும் பெறுவீர்களாக !
“ விநாயகர் அகவல் “ -
எல்லையில்லா ஆனந்தம் அளித்து 
அல்லல் களைந்தே அருள் வழிகாட்டி 
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் 
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி 
அணுவிற்கு அணுவாய் அப்பாலிற்கு அப்பாலாய் 
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி 
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடும் 
மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி 
அஞ்சக்கரத்தின் அரும்பொருள் தன்னை 
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத் 
தத்துவ நிலையை தந்து எனை ஆண்ட வித்தக விநாயக விரை கழல் சரணே “ 
(விநாயகர் அகவல் முற்றும்)
பொருள் -
அளவில்லாத ஆனந்தத்தைத் தந்து .. துன்பங்கள் அனைத்தும் அகற்றி .. அருள்வழி எது எனக்காட்டி 
சத் - சித் .. அதாவது உள்ளும் .. புறமும் சிவனைக் காட்டி .. சிறியனவற்றிற் கெல்லாம் சிறியது .. பெரியனவற்றிற்கு எல்லாம் பெரியது எதுவோ அதை கணுமுற்றி நின்ற கரும்புபோல என் உள்ளேயே காட்டி 
சிவ வேடமும் .. திருநீறும் விளங்கும் நிலையிலுள்ள உண்மையான தொண்டர்களுடன் எம்மையும் சேர்த்து அஞ்சக்கரத்தினுடைய உண்மையான பொருளை எமது நெஞ்சிலே அறிவித்து .. உண்மை நிலையை எனக்குத் தந்து எம்மை ஆட்கொண்ட ஞானவடிவமான விநாயகப்பெருமானே ! மணம் கமழும் உமது பாதார விந்தங்கள் சரணம் ! சரணம் ! சரணம் கணேஷா !!
விநாயகனே நினதருளால் எல்லாம் சிறப்பாகட்டும் !
“ ஓம் ஸ்ரீகணேஷ்வராய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment