திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையை காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவோம் “
கருணை பூக்கவும் தீமையை காய்க்கவும்
பருவமாய் நமதுள்ளம் பழுக்கவும்
பெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவோம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் தங்களனைவருக்கும் மங்களங்களை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமையும் .. விநாயகருக்கு உகந்த சதுர்த்தி திதியும் கூடிவரும் இந்நாளில் அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் “ ஓம் “ எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் விக்னவிநாயகரைப் போற்றித் துதித்து தீராமல் உள்ள நோய்கள் .. பிரச்சினைகள் தீரவும் .. வாழ்க்கையில் தொடர்ந்து பல்வகை துன்பங்களுக்கு ஆளானோர் அதிலிருந்து விடுபட்டு நிம்மதியும் மகிழ்ச்சியும் பெறவும் பிரார்த்திக்கின்றேன்
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
விநாயகர் அகவலை விநாயகருக்கே வழங்கிய ஔவையின் பெயர் சிறப்பினை நோக்குங்கால் அகர வரிசையில் பதினோராம் எழுத்தாகிய “ஔ” எனும் எழுத்தில் துவங்கும் ஔவை என்ற பெயர் அவ்வா என்ற சொல்லின் திரிபாக கருதப்படுகிறது .. அதன்பொருள் மூதாட்டி அல்லது தவப்பெண் என்பதாகும் .. என்று பழந்தமிழகராதி பகர்கிறது ..
இனி விநாயகர் அகவல் 5ம் பகுதியினைக் காண்போமாக -
இனி விநாயகர் அகவல் 5ம் பகுதியினைக் காண்போமாக -
சண்முக தூலமும் .. சதுர்முக சூட்சமும் எண்முகமாக இனிதெனக்கு அருளி
புரியட்ட காயம் புலப்பட எனக்கு தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்தி கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி என்னை அறிவித்து எனக்கு அருள்செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில் -

பொருள் -
உருவமான தூலமும் .. அருவமான சூட்சுமமும் எனக்கு எளிதில் புரியும்படி அருளி .. மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன்மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி கபாலவாயிலை எனக்கு காட்டித்தந்து சித்தி முத்திகளை இனிதாக எனக்கு அருளி நான் யார் என்பதை எனக்கு அறிவித்து .. பூர்வஜென்ம கன்மவினையை அகற்றி சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கு தந்து அதன்மூலம் எண்ணங்களை தெளிவாக்கி இருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றே அடிப்படையானது என்பதை உணர்த்தி .. அருள் நிறைந்த ஆனந்தத்தை உன் காதுகளில் அழுத்தமாகக் கூறி -

இறையருளும் .. மகிழ்ச்சியும் தங்கள் குடும்பத்திற்கு என்றும் கிடைத்திட விக்ன விநாயகரைப் பணிவோமாக ! ஓம் ஸ்ரீகணேஷ்வராய நமஹ !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
No comments:
Post a Comment