PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS WISH YOU ALL A BLESSED THURSDAY & A DIVINE KUMAARA SHASHTI VIRADAM TOO .. MAY THE BLESSINGS OF LORD GANESHAA FULFILL ALL YOUR DESIRES & REMOVE ALL THE NEGATIVE FORCES FROM YOUR LIFE .. " JAI SHREE GANESHAAYA NAMAHA "






களியானைக் கன்றைக் கணபதியைச்
செம்பொன் ஒளியானைப் பாரோர்க்குதவும் அளியானைக் கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன் தாள் நண்ணுவதும் நல்லார் கடன் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் குருவருளும் .. இறையருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்று .. நம் வினைகளின் வினைப்பயனைத் தீர்த்தருளும் விக்னவிநாயகரைத் துதித்து .. சகல துன்பங்களும் சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்து .. வளமான நல்வாழ்வுதனை தங்களனைவரும் பெற்றிடவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
தன் இளமை நீங்கி .. முதுமைக் கோலத்தை விரும்பியேற்று நாடெங்கும் தனது தமிழ்ப் புலமையால் நல்லறிவு புகட்டிய அன்னை ஒளவைப் பிராட்டியால் விநாயகருக்காக அருளப்பட்ட
“விநாயகர் அகவலின் “ 4ம் பகுதியைக் காண்போம் -
“ இடைபிங் கலையின் எழுத்தறிவித்து கடையிற்சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்றுமண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் குண்டலி அதனிற் கூடிய அசபை விண்டெழுமந்திரம் வெளிப்பட உரைத்து மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்தே !
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி -
பொருள் -
இடகலை .. பிங்கலை எனப்படும் இடது வலதுபக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடுநாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி .. அக்னி .. சூரியன் .. சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண்போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலினி சக்தியை எழுப்பி அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி மூலாதாரத்தில் மூண்டு எழக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும் சூரியநாடி .. சந்திரநாடி ஆகியவற்றின் இயக்கத்தையும் .. குணத்தையும் கூறி .. இடையிலிருக்கும் சக்கரத்தின் பதினாறு இதழ்களின் நிலையையும் உடலில் உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளையும் காட்டி -
விநாயகரைப் போற்றுவோம் ! வினைகள் யாவும் களைவோமாக ! ஓம் கணேஷ்வராய நமஹ !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person, smiling, indoor

No comments:

Post a Comment