யானை முகத்தான் பொருவிடையான் சேய் அழகார் மான மணிவண்ணன் மாமருகன்
மேனி முகம் வெள்ளக் குமிழி மதத்து விநாயகன்
என் உள்ளக் கருத்தின் உளன் “
மேனி முகம் வெள்ளக் குமிழி மதத்து விநாயகன்
என் உள்ளக் கருத்தின் உளன் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள்
அரும்பெரும் வாழ்வு வாழ எமக்கு வெற்றிகளை நல்கும் வித்தகக் கடவுள் விக்னேஷ்வரனின் திருவருளும் .. அருட்கடாக்ஷ்மும் தங்களனைவருக்கும் துணை நிற்பதாக ..
அரும்பெரும் வாழ்வு வாழ எமக்கு வெற்றிகளை நல்கும் வித்தகக் கடவுள் விக்னேஷ்வரனின் திருவருளும் .. அருட்கடாக்ஷ்மும் தங்களனைவருக்கும் துணை நிற்பதாக ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
விநாயகரின் அருட்கடாக்ஷ்ம் பெற்ற அன்னை ஒளவை அவரின் திருவருளாலேயே கைபாடும் திறன் பெற்றவர் .. அவரது யோக நூலாம் “விநாயகர் அகவல்”
3ம் பகுதியக் காண்போம் -
3ம் பகுதியக் காண்போம் -
“ உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டா ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்து அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி
மலமொரு மூன்றினை மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறு ஆதாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே “
தெவிட்டா ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக்கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்து அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி
மலமொரு மூன்றினை மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறு ஆதாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே “
பொருள் -
வெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனது காதுகளில் உபதேசித்து .. எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத ஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி .. தங்கள் இனிய கருணையினால் மெய் .. வாய் .. கண் .. மூக்கு .. செவி ஆகிய ஐந்து பொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினை இனிதாக எனக்கு அருளி .. (ஐந்து பொறிகளும் ஒடுங்கும் கருத்தினை அருளி) நல்வினை .. தீவினை என்ற இரண்டு வினைகளையும் நீக்கி .. அதனால் ஏற்பட்ட மாய இருளை நீக்கி ..
சாலோகம்
சாமீபம்
சாரூபம்
சாயுச்சியம்
என்ற நான்கு தலங்களையும் எனக்கு தந்து ..
ஆணவம் .. கன்மம் .. மாயை என்ற மூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய மயக்கத்தை அறுத்து ..உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும் ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி
மூலாதாரம்
சுவாதிட்டானம்
மணிபூரகம்
அநாகதம்
விசுத்தி
ஆக்ஞை
என்ற ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி அதன் பயனாக பேச்சில்லா மோன நிலையை அளித்து ..

பெருமைமிக்க விநாயகர் அகவலை பாராயணம் செய்வோம் ! அனைத்து நலன்களையும் பெறுவோமாக! ஓம் கணேஷ்வராய நமஹ !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment