PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM....GURUVE SARANAM... WISH YOU ALL A BLESSED TUESDAY & A DIVINE KUMAARA SHASHTI VIRADAM (16TH DAY) MAY LORD GANESHA REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & SHOWER YOU WITH LOVE PEACE & HAPPINESS TOO .. " JAI SHREE GANESHAAYA NAMAHA




திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக் காதலால் கூப்புவர் தம் கை “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
செவ்வாய்க்கிழமையும் .. விநாயகர் சஷ்டி விரதம் 16ம் நாளுமாகிய இன்று விக்னவிநாயகரைப் போற்றித் துதித்து .. அனைத்து தடை .. தடங்கல்களை நீக்கி .. சகலசௌபாக்கியங்கள் நிறைந்த வாழ்வுதனை தங்களனைவருக்கும் தந்தருளுமாறு பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
ஒளவை மிகச் சிறந்த விநாயக உபாசகியாக விளங்கியவர் .. அவரால் பாடப்பெற்ற 
“விநாயகர் அகவல்” - இரண்டாம் பகுதியினக் காண்போம் ..
“ விநாயகர் அகவல் “ 
சொற்பதங் கடந்த துரிய மெய்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே ! முப்பழம் நுகரும் மூசிகவாகன இப்பொழுதென்னை ஆட்கொள்ளவேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந்தருளி மாயாப்பிறவி மயக்கம் அறுத்தே திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென்னுளந்தன்னில் புகுந்து குருவடிவாகிக் குவலயந்தன்னில் திருவடி வைத்து திறமிது பொருளென வாடாவகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே “
பொருள் -
சொற்களால் விபரிக்க முடியாத துரியம் எனப்படும் நிலையில் உண்மையான ஞானமானவனே ! மா .. பலா .. வாழை ஆகிய மூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே ! மூஞ்சூறினை வாகனமாகக் கொண்டவரே ! இந்தகணமே என்னை ஏற்றுக்கொள்ள வேண்டி தாயைப் போல் தானாக வந்து எனக்கு அருள்புரிபவரே ! திருத்தமானதும் .. முதன்மையானதும் ஐந்து எழுத்துக்களின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞ்சாட்சர மந்திரத்தின் பொருளை தெளிவாக விளங்க என்னுடைய உள்ளத்தில் புகுந்து குருவடிவெடுத்து மிகமேன்மையான தீட்சை முறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையான நிலையான பொருள் எது என்று உணர்த்தி .. துன்பமில்லாமல் என்றும் இன்பத்துடன் இருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்கு அருள் செய்து கோடாயுதத்தால் என்னுடைய பாவ வினைகளை அகற்றி ..
ஸ்ரீகணேஷனைப் போற்றுவோம் ! அளவில்லாத ஆனந்தத்தைத் தந்தருள்வானாக ! 
“ ஓம் ஸ்ரீகணேஷ்வராய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: one or more people

No comments:

Post a Comment