ஹரிஷின்
இல்லத்தில் ஹரிஹரனின் அருள்வாசம் கமழ்ந்திருக்க
குருவின்
பூஜையில் பாலகன் உயர்ந்து
நிற்க
குற்றம்
போக்கிட எம்சிரம் தாழ்ந்து நிற்க
நடுவினில் நின்முகம் ஓங்கி நிற்க
நாற்புரமும் வாழைப்பழ மாலை அணைத்துநிற்க!
நடுவினில் நின்முகம் ஓங்கி நிற்க
நாற்புரமும் வாழைப்பழ மாலை அணைத்துநிற்க!
மேலான
தெய்வம் நீயே என்றிருக்க
கீழிறங்கி வருவாயோ என கண் பூத்திருக்க
அந்தரத்தில் ஆடியே உளம் காத்திருக்க
அற்புத தரிசனம் எதிர் பார்த்திருக்க!
கீழிறங்கி வருவாயோ என கண் பூத்திருக்க
அந்தரத்தில் ஆடியே உளம் காத்திருக்க
அற்புத தரிசனம் எதிர் பார்த்திருக்க!
உடைபட்ட
தேங்காய்கள் உன்பாதம் அணிசூழ்ந்து நிற்க
உடைந்த
எனதுள்ளமே உனதருள் எதிர்பார்த்திருக்க
கையில்
காப்புடன் வில் அம்பு நீ ஏந்தியிருக்க
பொன்னான முகத்தில் புன்னகைப் பூத்திருக்க
சின் முத்திரை நானிருக்கேன் என்றிருக்க
விட்டது வினையும் விரைந்தே நின்னருளிருக்க!
பொன்னான முகத்தில் புன்னகைப் பூத்திருக்க
சின் முத்திரை நானிருக்கேன் என்றிருக்க
விட்டது வினையும் விரைந்தே நின்னருளிருக்க!
சிவா
ஹரிஷ் ஆரத்தி உன்னை குளிர்விக்க
சரணம்
சரணம் எனும் உயர் நாமம் நிலைதிருக்க
தினம் பாடியே இங்கு உயர்ந்து நாமிருக்க
காலையும் மாலையும் ஐயனை பூஜித்திருக்க
தினம் பாடியே இங்கு உயர்ந்து நாமிருக்க
காலையும் மாலையும் ஐயனை பூஜித்திருக்க
குருவின்
ஆசியும் மென்மெலும் அனைவ்ருக்கும் கிடைத்திருக்க
குறைதீர்த்து
அருள்புரிவாய் சபரிகிரி ஈசனே……..
No comments:
Post a Comment