" உண்ணாமுலை உமையாளோடும்
உடன் ஆகிய ஒருவன் பெண் ஆகிய பெருமான் மலை திருமாமணி திகழ !
மண் ஆர்த்தன் அருவித்திரள் மழலை முழவு அதிரும் அண்ணாமலை தொழுவார் !
வினை வழுவா வணம் அறுமே “
(திருஞானசம்பந்தர்)
உடன் ஆகிய ஒருவன் பெண் ஆகிய பெருமான் மலை திருமாமணி திகழ !
மண் ஆர்த்தன் அருவித்திரள் மழலை முழவு அதிரும் அண்ணாமலை தொழுவார் !
வினை வழுவா வணம் அறுமே “
(திருஞானசம்பந்தர்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. இனிய கார்த்திகைத் தீபத்திருநாள் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும் .. தீபவிளக்கு ஏற்றி அறியாமை எனும் இருள் அகன்று வளமான வாழ்வும் இறை அருளும் பெறுவோமாக .. இன்றைய சிறப்புமிக்க நன்னாளில் முருகப்பெருமானையும் . அண்ணாமலையானையும் .. உண்ணாமுலையம்மனையும் போற்றித் துதிப்போமாக !
ஓம் தத் புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
முக்தியளிக்கும் மூலப்பரம்பொருளாம் இறைவன் அக்னி சொரூபமாக காட்சிதரும் அருள்மிகு அண்ணாமலையானை கார்த்திகை தீபத்திருநாளில் வணங்கினால் அனைத்தும் பெறலாம் என்பதில் ஐயமில்லை ..
இந்த நவீன உலகத்தில் பொருளை கட்டுவதற்கு பலவழிகள் இருந்தும் .. மன அமைதியுடன் நிம்மதியாக வாழ்வதற்குத்தான் பலரும் போராடவேண்டியதாயிருக்கிறது .. அத்தகைய மன அமைதியும் நிம்மதியும் இறையருளால் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒன்றாகும் ..
அந்த வகையில் பக்தர்கள் நினைத்த மாத்திரத்திலேயே நிம்மதியும் .. முக்தியையும் தரும் திருத்தலமாக விளங்குகிறது திவண்ணாமலை அருணாலேஸ்வரர் திருக்கோவில் .. இந்த திருத்தலத்தில் இருக்கும் மலையே சிவனாக வணங்க்கப்படுகிறது .. இங்கு ஈசன் மலையாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் ..
திருக்கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மலைதீபம் சிவாம்சமாகும் ..
“ யாராலும் அணுகமுடியாத ஞானமலை அண்ணாமலை “ .. தேவர்களாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருள் இறைவன் .. ஆனால் நம்மீது கொண்ட கருணையினால் தன்னை எளிமைப்படுத்திக்கொண்டு அருள்புரியும் நாளே திருக்கார்த்திகை ..
“ யாராலும் அணுகமுடியாத ஞானமலை அண்ணாமலை “ .. தேவர்களாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருள் இறைவன் .. ஆனால் நம்மீது கொண்ட கருணையினால் தன்னை எளிமைப்படுத்திக்கொண்டு அருள்புரியும் நாளே திருக்கார்த்திகை ..
சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்கமுடியாத தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டபோது ஈசனே முருகனாக அவதரித்து அருள்புரிந்தார் . அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறுதீப்பொறிகள் கிளம்பி சரவணப்பொய்கையில் சிறுகுழந்தைகளாக உருவெடுத்தன .. அதுபோல் பெருஞ்சுடரான அண்ணாமலை தீபமே நம் வீட்டு சிறு அகல்களில் குட்டிக்குழந்தையாக முருகனாக ஒளிவீசுகிறது .. வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றும்போது குறைந்தபட்சம் ஆறுதீபங்களை வாசலில் வைக்கவேண்டும் ..
அண்ணாமலை தீபம்வேறு .. நம்வீட்டு அகல்தீபம் வேறல்ல .. இரண்டும் ஒன்றே !
அண்ணாமலை தீபம்வேறு .. நம்வீட்டு அகல்தீபம் வேறல்ல .. இரண்டும் ஒன்றே !
“ ஓம் அருள்மிகு அண்ணாமலை உண்ணாமுலையம்மனே ! போற்றி ! போற்றி ! போற்றி !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment