SWAMY SARANAM....POOJA AT KANNAN SWAMY RESIDENE MUMBAI


















கண்ணீரிலும் கரையாது
சொன்னாலும் போகாது 
மன்னிப்புக் கேட்டலும் தீராது 
அந்நாளில் செய்த பாவம் 
எந்நாளும் தீராது
உன்னடி தொழுதார்க்கு 
பாவங்கள் கரைந்திடும்
உன் பாதம் பணிந்தார்க்கு 
புதுப்புதுப் பாவங்கள்
அணுகாது காத்திடுமே
மெய்ஞானம் போதிக்கும் 
மெய்யான சற்குருவே 
அறிவிலியாய் இருந்த எமை
உன் அடியவராக்கினாய்
கூட்டுப் புழுவைப் போல் 
இருந்த என்னை 
எண்ணச் சிறகு கொண்டு 
பறக்கப் பணித்தனை
உன் சித்தம் இல்லாது
நான் கவி வடிக்கக் கூடுமோ
உன்னைப் பாடுதலல்லால் 
வேறென்ன்ன செய்வேன் 
சீர்மிகு சபரி உறையும் சீராளனே
 


No comments:

Post a Comment