ஸ்ரீராமச்சந்திரனுக்கு ஜெயமங்களம் !
நல்ல திவ்யமுகச்சந்திரனுக்கு சுபமங்களம் !
மாராபிராமனுக்கு மனுபரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு ரவிகுலசோமனுக்கு ஜெயமங்களம் “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ ஸ்ரீராமநவமி “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஸ்ரீராமாவதாரம் பரிபூரண அவதாரமாகும் ..
“ அறமே வாழ்வின் ஆன்மீகஜோதி ! அறத்தை வளர்ப்பதற்கும் .. மனிதனிடம் மறைந்துகிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீராமனாக அவதாரம் செய்த புண்ணியமிக்க நன்னாளுமாகும் .. இந்நாளில் எதற்கும் உதவாத காம .. குரோத .. மோக .. லோப .. மத மாச்சார்யம் எனும் தீயகுணங்களை விட்டொழித்து அனைவரையும் நேசிக்கும் பண்பும் .. துன்பத்தில்கலங்காத மனதிடத்தையும் .. எடுத்த செயல்கள் யாவும் தங்களனைவருக்கும் வெற்றியளிக்கவும் அருட்கடலாகிய ஸ்ரீராமச்சந்திரனைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தசரதாய வித்மஹே !
சீதாவல்லபாய தீமஹி !
தந்நோ ராம ப்ரசோதயாத் !!
சீதாவல்லபாய தீமஹி !
தந்நோ ராம ப்ரசோதயாத் !!
ராமநவமி பங்குனி அல்லது சித்திரைமாதம் வளர்பிறை நவமி திதியில் அமைகிறது .. ராமபிரானின் ஜனனகாலத்தில் ஐந்துகிரகங்கள் உச்சம் பெற்று விளங்கின .. சூரியன் .. குரு .. சனி .. செவ்வாய் .. சுக்கிரன் எனும் ஐந்து கிரகங்களே அவை .. எனவே ராமஜாதகத்தை பூஜை அறையில் வைத்து பூஜைசெய்பவர்களுக்கு ஜாதகரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரக தோஷங்களும் நீங்கும் .. வியாதிகளும் குணமாகும் .. ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது நம்பிக்கை .. இன்று ஸ்ரீராமனின் பட்டாபிஷேக புகைப்படத்தை பூஜைசெய்வது .. ராமாயணம் படிப்பது
மற்றும் 108முறை ஸ்ரீராமஜெயம் எழுதுவது சிறப்பாகும் ..

நவமியில் பிறந்த நாயகரான ஸ்ரீராமர் உபதேசம் மூலமாக தன் கொள்கைகளை விளக்காமல் உதாரண புருஷராக தானே வாழ்ந்து காட்டினார் ..
” ஓகமாட ! ஓகபாணமு ! ஓகபத்னிவ்ரதுடே “ என்கிறது தியாகையரின் கீர்த்தனை ..
“ ஒருசொல் ! ஒருவில் ! ஒரு இல் “ இதன்படி வாழ்ந்தவரும் ஸ்ரீராமரே ! என நம் தமிழ் அதை நயம்பட உரைக்கிறது ..

கிருஷ்ணாவதாரத்தில் என்ன நடக்கும் என்பது ஸ்ரீகிருஷ்ணருக்குத் தெரியும் .. ஆனால் ..
ராம அவதாரத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது மானுட அவதாரம் எடுத்த ஸ்ரீராமருக்குத் தெரியாது .. அதுதான் இந்த அவதாரத்தின் மகிமை ..

ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று பொருள் .. சுகதுக்கங்களில் சலனம் அடையாமல் தான் ஆனந்தமாகவே இருந்துகொண்டு மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருபவன் தான் ஸ்ரீராமன் ..
திருமால் பக்தர்களின் எட்டெழுத்தும் ..
சிவநேயச் செல்வர்களின் ஐந்தெழுத்தும் சேர்ந்தே
“ ராம “ என்ற இரண்டெழுத்து மந்திரம் உருவானது என்கிறார் “ எவரநி “ என்று தொடங்கும் கீர்த்தனையில் தியாகராஜர் ..

” நாராயணாய “ மந்திரத்தில் ஜீவ அட்சரம் “ ரா “ -
அவ்வெழுத்து இல்லையேல் ந அயனாய என்று
“ வழிகாட்டாதவன் “ எனப் பொருள்படும் ..
அவ்வாறே “ நமசிவாய “ மந்திரத்தில் ஜீவ அட்சரம் “ ம “
அவ்வெழுத்தை நீக்கினால் “ நசிவாய “ என மங்கலத்தை வழங்காதவன் எனப் பொருள்படும் ..
ஆக இருமூலமந்திரங்களிலும் உயிர் எழுத்தாக உள்ள
“ ரா “ .. “ ம “ என்ற இரண்டு எழுத்துகளும் இணைந்து
“ ராம “ என்ற அற்புதச் சொற்பதம் பிறந்தது .. அதுவே நற்பதம் அருளும் என்கிறார் தியாகராஜர் ..

“ பட்டாபிஷேகம் “ என்று ராமர் பரவசப்பவுமில்லை ..
“ வனவாசம் “ என்று ராமர் வருத்தப்படவுமில்லை ..
இன்பத்தையும் .. துன்பத்தையும் சமநோக்கில் எடுத்துக்கொண்டார் .. இன்று போய் நாளை வா ! என பகைவனுக்கும் கருணைகாட்டினார் .. வானரங்கள் .. பறவை ஜடாயு .. கரடி ஜாம்பவான் .. அணில் என காக்கை .. குருவி எங்கள் ஜாதி ! என்ற மேலான சமத்துவம் கடைபிடித்து வாழ்ந்த இதிகாச நாயகனே ஸ்ரீராமர் ..

எங்கெல்லாம் ஸ்ரீராமநாமம் ஒலிக்கிறதோ ! ராமரின் திருக்கதை எவ்விடங்களில் எல்லாம் சொல்லப்படுகிறதோ ! அங்கெல்லாம் அழுதகண்ணும் தொழுதகையுமாக நின்றிருப்பான் ஸ்ரீஹனுமான் ..
ஸ்ரீராமநாமம் கூறியே அனுமன் கடலைக் கடந்தான் .. ஆனால் மூலமந்திரத்திற்கு உரிய மூர்த்தியோ அணைகட்டி “ சேதுராமனாக “ ஆகியே இலங்கை சென்றார் ..

மூர்த்தியைவிட மூலமந்திரஜபமே சாலச்சிறந்தது என்று கண்டு பாரத ஞானிகள் அனைவரும் அப்பாதையில் தான் சென்றார்கள் .. சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்த சங்கீதமும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாகராஜரின் ராமபக்தி ஆன்மீக உலகம் அறிந்த ஒன்றே !
வால்மீகி என்ற மலையில் உற்பத்தியாகி ..
ராமன் என்ற கடலில் கலப்பதற்கு பூமியைப் புனிதப்படுத்திக்கொண்டு செல்லுகின்ற மகாநதியே ராமாயணம் .. ராமன் காட்டிய அயணம் (பாதை) என்பதால் இவரது வரலாற்றுநூல் “ ராமாயணம் “ எனப் பெயர் பெற்றது ..

நற்குணங்கள் நம்மிடையே தழைக்கும் நாள் எதுவோ ! அதுவே ஸ்ரீராமன் பிறந்த பொன்னாளாகும் ..
“ ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே !
ரகுநாதாய ஸீதாய பதயே நமஹ “
“ ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே !
ரகுநாதாய ஸீதாய பதயே நமஹ “
” ஸ்ரீராம் ! ஜெயராம் ! ஜெய ஜெயராம் ”
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment