” பீஜகவிருக்ஷ சாயாஸ்திதாம்
பராசக்திஸ்வரூப நாயகீம்
காவேரீ புஷ்பநகரிணீம் தேவீம்
பகவதீம் ஸ்ரீகண்ணகீம் நமாமி “
பராசக்திஸ்வரூப நாயகீம்
காவேரீ புஷ்பநகரிணீம் தேவீம்
பகவதீம் ஸ்ரீகண்ணகீம் நமாமி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள்
பங்குனித் திங்கள் இரண்டாம் வாரமாகிய இன்று வேங்கைமரநிழலில் பராசக்தி வடிவமாக தெய்வீக உருவெடுத்தவளும் காவிரிப்பூம்பட்டினத்தினை தன் சொந்த ஊராகக் கொண்டவளும் பகவதியாகிய அன்னை கண்ணகியை போற்றித் துதித்து .. நல்லாரோக்கியம் பெற்று .. செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றிபெற அன்னை அருள்புரிவாளாக !

முற்பிறப்பில் செய்த தவத்தின் பயனாய் சிறப்போடு தோன்றியவள் .. மனிதகுலம் போற்றும் மாணிக்கம் போன்றவள் .. பங்குனித் திங்கள் தினத்தை முன்னிட்டு பெண்களால் கண்ணகி அம்மனை நினைத்து விரதம் கடைபிடிக்கப்படுகின்றது .. இந்நாளில் பக்தர்கள் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகளும் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு தமது நேர்த்திக்கடன்களைச் செலுத்துவர் .. இதனால் கண்ணகி அம்மன் ஆலயங்களில் பங்குனித் திங்களில் பொங்கல் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம் ..
பெண்களுக்கு மாங்கல்யநலம் .. பலம் கிட்டும் .. கணவரின் துன்பங்கள் .. நீங்காத நோய்கள் தீரும் .. குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கி குதூகலம் ஏற்படும் .. மங்களம் பெருகும் .. கணவன் மனைவியிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி அன்பு வளரும் .. அமைதி நிலவும் .. அன்னையைப் போற்றி அவள் தாள் பணிவோமாக !
ஓம் சக்தி ஓம் ! ஓம் கண்ணகித் தாயே போற்றி ! போற்றி ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ தீர்க்க சுமங்கலிபவ “
ஓம் சக்தி ஓம் ! ஓம் கண்ணகித் தாயே போற்றி ! போற்றி ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ தீர்க்க சுமங்கலிபவ “
No comments:
Post a Comment