SWAMY SARANAM. GURUVE SARANAM GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY & DIVINE " KAAMADAA EKADASI " FASTING ON THIS KAAMADAA EKAADASI .. OUR SEVERAL SINS CARRIED FROM SEVERAL BIRTHS WILL BE BURNED TO ASHES & THE SOULS GETS PURIFIED & IT BESTOWS THE HIGHEST MERIT .. " OM NAMO NAARAAYANAAYA "




” கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் 
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்றார்த்தும் வண்டார் தண்ணந் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல் பண் தான்பாடி நின்றாடிப் பரந்து திரிகின்றனவே “ (நாலாயிரத் திவ்யப்ரபந்தம்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் செவ்வாய்க்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காத்தருளும் ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த ஏகாதசி விரதமும் கூடிவருவது சிறப்பு .. அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று .. சுபீட்சமான நிம்மதியான வாழ்வுதனைப் பெற்றிட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
வளர்பிறையில் வரும் ஏகாதித் திதியை
“ காமதா ஏகாதசி “ என்றழைப்பார்கள் .. இவ்விரதமானது அனுஷ்டிப்பவரின் சகலவிதமான பாவங்களையும் நீக்கி மோட்சப் பிராப்தியை அளிக்கும் ஓர் சக்திவாய்ந்த ஏகாதசியாகும் ..
உலர்ந்த விறகானது அக்னியின் தொடர்பால் எப்படி எரிந்து சாம்பலாகிறதோ அதேபோல் “ காமதா ஏகாதசி “ விரதத்தின் புண்ணிய பலனின் பிரபாவத்தால் சகலவித பாபங்களையும் நீக்குவதோடு புத்திர பிராப்தியையும் தந்தருளுகிறது .. அத்தோடு கர்மவினையின் காரணமாக இழிநிலையில் பிறவி எடுத்திருந்தாலும் .. அதிலிருந்து விடுதலை பெறுவதுடன் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெறுவர் .. இவ்விரத கதையை மற்றும் மஹாத்மியத்தை கேட்பவரும் .. படிப்பவரும்கூட அத்யந்தபலனை அடைவர் ..
புராண வரலாறு - 
போகிபூர் என்னும் நகரை புண்டரீகன் என்னும் அரசன் ஆண்டுவந்தான் .. அவனது ஆட்சியில் நகரானது அனைத்து வளங்களும் பெற்று ஐஸ்வர்யத்துடன் விளங்கியது .. அந்நகரில் சங்கீதத்தில் நிபுணத்துவம் பெற்ற லலித் மற்றும் லலிதா என்னும் கந்தர்வ தம்பதியினர் கற்பனையில் கூட பிரிவு என்பதனை ஏற்க இயலாதளவு ஒருவர்மீது ஒருவர் அன்புமிக்கவர்களாக வாழ்ந்து வந்தனர் ..
ஒருமுறை அரசன் புண்டரீகன் இசையரங்கத்தில் கந்தவர்களுடன் அமர்ந்து சங்கீதத்தை ரசித்து கொண்டிருந்தபோது கந்தர்வனான லலித் திடீரென அவனுடைய மனைவி ஞாபகம் வரவே சுருதிவிலகி பாடலை தவறாக பாடியதன் காரணமாக அரசன் அவனை நரமாமிசம் தின்னும் ராட்சசனாக மாறும்படி சபித்தான் .. சாபம் பெற்ற லலித் அக்கணமே கோரவடிவுடைய ராட்சசனாக மாறி காட்டில் இருந்துகொண்டே அநேக பாபங்களை செய்ய ஆரம்பித்தான் ..
அவனுடைய மனைவியும் அவன் போகுமிடமெல்லாம் பின் தொடர்ந்து சென்று அவனுடைய நிலையைக் கண்டு வருந்தி இறுதியில் விந்தியாசல பர்வதத்தை அடைந்து அங்கு சிருங்கிமுனிவருடைய ஆலோசனைப்படி “ காமதா ஏகாதசியை “ முறைப்படி அனுஷ்டித்தி அவ்விரத புண்ணியபலனை தன் கணவருக்கு அளித்து அவனை அதிலிருந்து மீட்டாள் .. 
காமதா ஏகாதசியின் பிரபாவத்தால் இருவரும் முன்பைவிட மிகவும் செழிப்புடனும் .. அன்புடனும் வாழ்ந்து இறுதியில் ஸ்வர்க்கலோகப் பிராப்தியையும் பெற்றனர் ..
இதன்மூலம் நாம் அறிவது என்னவென்றால் மனிதர்கள் எப்பொழுதும் தன் சுகத்தைப் பற்றிய சிந்தனையில் உழல்கின்றனர் .. இதில் தவறேதும் இல்லை .. எனினும் சதாசர்வகாலமும் அது ஒன்றே வாழ்வின் குறிக்கோள் என்று இருந்தால் அது நம் கடமைகளை மறக்கச்செய்து அதனால் விளையும் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடுகிறது .. கந்தர்வன் லலித்தும் கடமையை மறந்ததால் கோரராட்சசனாக மாறி வெறுக்கத்தக்க காரியங்களை செய்ததுடன் கஷ்டத்தையும் அனுபவிக்க நேர்ந்தது ..
தான் பெற்ற புண்ணியபலனை மற்றவரின் நலம்கருதி அர்ப்பணிப்பதால் அந்நற்கர்மாவானது பன்மடங்கு பெருகி மிகுந்த சக்திவாய்ந்ததாகிறது .. அத்தகைய மேன்மையான தானத்தை செய்பவர் தெய்வத்திற்கு ஒப்பானவராகிறார் ..

பகவானைப் போற்றுவோம் ! நலம்பல பெறுவோமாக ! 
“ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


 Image may contain: 1 person

No comments:

Post a Comment