” திருமலை வேந்தா ஸ்ரீவெங்கடேசா !
திருமங்கையரின் மனநேசா கருநீலவண்ண கமலக்கண்ணா ! கருடனெனும் திவ்ய வாஹனா !
குறைதீர்த்தருள்புரி கோமளரூபா !
கோவிந்த மங்கள வரதா வாமனா “
திருமங்கையரின் மனநேசா கருநீலவண்ண கமலக்கண்ணா ! கருடனெனும் திவ்ய வாஹனா !
குறைதீர்த்தருள்புரி கோமளரூபா !
கோவிந்த மங்கள வரதா வாமனா “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் புதன்கிழமையும் .. வளர்பிறை துவாதசித் திதியும் கூடிவரும் இந்நாளில் ஸ்ரீமன் நாராயணனை பூவுலகையும் தனது மூன்றடியால் அளந்து திரிவிக்கிரமனாக .. வாமன அவதாரமாக வழிபடுவது சிறப்பாகும் .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கிடவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் விக்ரமாய வித்மஹே !
விஸ்வரூபாய தீமஹி !
தந்நோ வாமன ப்ரசோதயாத் !!
விஸ்வரூபாய தீமஹி !
தந்நோ வாமன ப்ரசோதயாத் !!
பெருமாளின் அவதாரங்களில் இது ஐந்தாவது அவதாரமாகும் .. பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ளவடிவமே
“ வாமன அவதாரமாகும் “ .. தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் .. மண்ணுக்கும் உயர்ந்து நின்றார் .. பிரகலாதனுடைய பேரனாகிய ”பலி” என்ற அசுரராஜன் ஆண்டுவந்த காலமே வாமன அவதார காலமாகும் ..
“ வாமன அவதாரமாகும் “ .. தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் .. மண்ணுக்கும் உயர்ந்து நின்றார் .. பிரகலாதனுடைய பேரனாகிய ”பலி” என்ற அசுரராஜன் ஆண்டுவந்த காலமே வாமன அவதார காலமாகும் ..
மூன்றடி நிலங்களை தானம் செய்வதாக மகாபலி உறுதிமொழி அளித்ததுமே வாமனமூர்த்தியாகிய பகவானின் திருமேனி எங்கும் நீக்கமற நிறைந்து நின்று விண்ணும் .. மண்ணும் .. திசைகளும் .. மற்ற உலகங்களும் ஏழுகடலும் அத்தனையும் அவரிடம் அடங்கி இருந்தன ..
ஸ்ரீஹரியாகிய வாமனரின் ஒருகையில் சுதர்சன சக்கரம் சுழன்றது .. மற்றொருகையில் சாரங்கம் என்ற வில்லும் .. இன்னொருகையில் கௌமோதகி என்ற கதையும் .. வேறொருகையில் வித்யாதரம் என்ற வாளும் பிடித்து நின்றிந்தார் ..
தேவர்களும் .. முனிவர்களும் பகவானுடைய திவ்ய தரிசனத்தைக் கண்டு அவரைத் துதிபாடி வணங்கினார்கள் .. வானளாவ நின்ற வாமனர் ஒருகாலால் பூமியை அளந்தார் .. மற்றொரு காலால் வானத்தை அளந்தார் .. ஆயினும் இரண்டாவது அடிக்கு ஆகாயம் போதவில்லை ..
இந்நிலையில் மூன்றாவது அடிவைக்க இடம் ஏது என்று வினவ .. இதோ ! என் சிரசின்மீது தாங்கள் காலடியை வைக்கலாம் .. அதனால் ஏற்படும் எந்த விளைவுகளையும் நான் ஏற்றுக்கொள்ள சித்தம் என மாபலி சொல்ல .. வாமன அவதாரம் கொண்ட பகவானும் மாபலியின் தலைமீது தன் திருவடியை வைத்து அவனைக் கீழுலகத்தில் ஒன்றான அதலத்தில் அழுத்தி .. அங்கே சக்கரவர்த்தியாக நிலைத்திருந்து அரசாளும்படி ஆணையிட்டார் .. அப்போது முதல் மாபலிமன்னன் “ மாபலிச் சக்கரவர்த்தியாக “ உயர்ந்து மேலும் மேன்மையடைந்தான் .. நாராயணனின் திருவடி தரிசனம் மூவுலகிலும் கிடைத்தது .. மாபலிச் சக்கரவர்த்தி சிரஞ்சீவியர் எழுவரில் ஒருவராக இப்போதும் வாழ்கிறார் ..
உலகளந்த உத்தமனைப் போற்றுவோம் ! பகவானின் திருப்பாதக் கமலங்களில் சரணடைவோமாக !
“ ஓம் நமோ நாராயணாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் நமோ நாராயணாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment