PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA KANNAGI (BHAGAWATHY) MAY SHE PROTECT YOU FROM ALL THE EVIL FORCES & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS TOO .. " JAI SHREE MAA BHAGAWATHY SWAMY SARANAM.. GURUVE SARANAM"




” கோவல நாயகீம் தேவீம் 
ஹம்ஸானந்தீம் சௌந்தரீம் 
ஹிமாசல சிலோத்பூதாம் 
கல்பனாம் ஸ்ரீகண்ணகீம் நமாமி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
பங்குனித் திங்கள் மூன்றாம் வாரமாகிய இன்று அன்னை கண்ணகியை (கண்ணகை) வழிபாடு செய்வது சிறப்பு .. அன்னையை மனதாரப் போற்றித் துதித்து நலம்பல பெற்று தீர்க்கசுமங்கலியாக தீர்க்காயுளுடன் வாழ்ந்திட அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
கோவலனின் தர்மபத்தினி அன்னம்போல விளங்குபவள் .. (அன்னப்பறவை பாலை எடுத்து நீரைவிடுமாப்போல தன் அடியவர்களின் குறைகளை நீக்கி குணங்கொண்டு அருள்பவள்) பேரழகின் திருவுடையாள் .. இமயமலையில் சிலை உருவம் பெற்றவள் ( செங்குட்டுவன் இமயமலையில் கல்லெடுத்துக் கண்ணகிக்கு சிலை அமைத்தான் என்பது வரலாறு) கற்பகம் போல கருணைசுரப்பவள் இத்தகு அன்னை கண்ணகையை இந்நாளில் போற்றுவோமாக !
புராதனவழிபாட்டில் பிரசித்தமானது கண்ணகி வழிபாடாகும் .. திராவிடப் பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்திவழிபாட்டினையே பிரசித்திப் பெற்ற கண்ணகியம்மன் வழிபாட்டில் காண்கிறோம் !
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவியான சோழநாட்டில் பிறந்த கண்ணகி .. பாண்டிநாட்டில் வீரக்கற்பரசியாகி .. சேரநாட்டிலே பத்தினித் தெய்வம் எனப்போற்றப்பட்டு கண்ணகை அம்மனாக .. பகவதி அம்மனாக கோவில் கொண்டுள்ளாள் ..
கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரமே 
” ஆற்றுக்கல் பகவதி அம்மன் “ என்று புராணங்கள் மூலம் கூறப்படுகிறது .. தனது கணவன் கோவலன்மீது கூறப்பட்ட திருட்டுப்பழியை பாண்டிய மன்னனின் அரசவையில் பொய் என்று நிரூபித்துவிட்டு ஆவேசமாய் மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகி .. ஆற்றுக்காலுக்கு வந்து சாந்தம் அடைந்து கோவில் கொண்டதாகவும் கூறப்படுகிறது ..
வாழ்வில் ஒளியும் மகிழ்ச்சியும் ஏற்றிய காரணத்தால் கண்ணகை எனப் பெயர் பெற்றாள் .. நம்வாழ்விலும் என்றும் ஒளியேற்றிட அன்னையைப் போற்றுவோமாக ! 
“ ஓம் ஸ்ரீ கண்ணகித்தாயே சரணம் “ 
” தீர்க்கசுமங்கலிபவ “ 
வாழ்க வளமுடனும் ;.. என்றும் நலமுடனும் .
 Image may contain: 2 people, outdoor

No comments:

Post a Comment