GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY & A DIVINE " PRADOSHAM " TOO .. MAY LORD SHIVA REMOVE ALL THE SINS & SORROWS FROM YOUR LIFE & BRING YOU WITH GREAT JOY INTO THIS GLORIOUS PRESENCE .. " OM NAMASHIVAAYA ! JAI SHREE NANDHI DEV SWAMY SARANAM GURUVE SARANAM"

No automatic alt text available.
Image may contain: indoorImage may contain: indoor
Image may contain: indoor
" சிவமூர்த்தி கவுரிமுக சீர்க்கமலவனமலர்த்தும் நவக்கதிரே ! தட்சமகம் நசித்திட்டோய் நீலகண்டா ! தூக்கியவா ! தொல்பொருளே ! நவநவத்தோய் சிகாரனே ! நமசிவாயனே ! போற்றி ! போற்றி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சுக்கிரவாரம் எனப்படும் வெள்ளிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனுக்கு உகந்த பிரதோஷ விரதமும் கூடிவருவது சிறப்பாகும் .. இந்நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. அனைத்து செல்வங்களும் தங்கள் இல்லம் தேடிவர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக !
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
பிரதோஷம் எனும் இவ்விரதம் சிவமூத்திக்கு உகந்த விரதங்களுள் தலையாயது .. 
வெள்ளி பிரதோஷம் - எதிரிகளின் எதிர்ப்புகள் விலகும் உறவுகள் வளம்படும் .. சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும் ..
தோஷம் என்றால் - குற்றமுடையது என்று பொருள் 
அதேநேரம் பிரதோஷம் என்றால் - குற்றமில்லாதது என்று பொருளாகும் .. எனவே குற்றமற்ற இந்த பொழுதில் ஈஸ்வரனை வழிபடுவதால் நம் அனைத்து தோஷங்களும் நீங்கும் .. (மாலை 4.30 - 6.00 மணிவரையுள்ள காலமே பிரதோஷ நேரம்) எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தைப் பெறுவீர்களாக .. மற்றும் தரித்திரம் ஒழியவும் .. அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாக கருதப்படுகிறது ..
நலம்தரும் நந்திதேவருக்கு ருத்ரன் என்றொரு பெயரும் உண்டு ..
ருத் என்றால் - துக்கம் 
ரன் என்றால் - ஓட்டுபவன் 
ருத்ரன் என்றால் - துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள் .. எனவே பிரதோஷத் தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வரர் வழிபாடு செய்தல் நன்று ..
பிரதோஷ வேளையில் (மாலை - 4.30 - 6.00) சொல்லவேண்டிய ஸ்லோகம் - 
ஸித்தயோகீ மஹர்ஷிச்ச ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக ! 
பிக்ஷூச்ச பிக்ஷூருபச்ச விபனோம்ருது ரவ்யய !!
காலை மாலை இருவேளையும் பாராயணம் செய்து வந்தால் சிவனருள் கிட்டி நினைத்தது நிறைவேறும் .. இம்மையிலும் நன்மை தருவார் நம் பிரதோஷமூர்த்தி !
” ஓம் நமசிவாய ! ஓம் ஸ்ரீநந்தீஸ்வராய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

No comments:

Post a Comment