பள்ளியிலோதிவந்த சிறுவன்
வாயிலோ ராயிர நாமம் ! ஒள்ளிய வாகிப் போத வாங்கதனுக் கொன்று மோர் பொறுப்பிலனாகி
பிள்ளையாச்சீறி வெகுண்டு தூண் புடைப்பப்
பிள்ளையெயிற் றனல் விழிப்பேழ்வாய்
தெள்ளிய சிங்கமாகிய தேவைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே “ (பெரியதிருமொழி)

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சித்திரை மாதம் வளர்பிறை சதுர்த்தசித் திதியாகிய இன்று ஸ்ரீநரசிம்மமன் அவதரித்த திருநாளாக வழிபடுதல் சிறப்பு .. இரண்யனை வதம் செய்ய பக்தன் பிரகலாதனின் வாக்கைக் காப்பாற்ற .. தர்மத்தை நிலைநாட்ட .. “ எல்லா பொருட்கள் உள்ளேயும் நானிருக்கின்றேன் “ என்று நமக்கு உணர்த்தவே பகவான் ஸ்ரீநரசிம்மமூர்த்தியாக அவதரித்த திருநாளாகும் .. இந்நாளில் தங்களனைவரது பிரச்சினைகளும் தீர்ந்து .. தங்கள் வேண்டுதல்கள் யாவும் வேண்டியபடியே நிறைவேறிடவும் ஸ்ரீநரசிம்மனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் வஜ்ரநாகாய வித்மஹே !
தீக்ஷ்ணதம் ஷ்ட்ராய தீமஹி !
தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத் !!
தீக்ஷ்ணதம் ஷ்ட்ராய தீமஹி !
தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத் !!
திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரெனத் தோன்றிய அவதாரமாகும் .. நரசிம்மரின் வலதுகண்ணில் சூரியனும் .. இடதுகண்ணில் சந்திரனும் .. புருவமத்தியில் அக்னியும் உள்ளன ..
“ நரசிம்மன் “ என்றால் “ ஒளிப்பிழம்பு “ என்று அர்த்தம்
“ நரசிம்மன் “ என்றால் “ ஒளிப்பிழம்பு “ என்று அர்த்தம்
பிரச்சினைகளை இவரிடம் கொண்டு சென்றால் அதனை ஒத்திப்போடுவதில்லை .. அடுத்தநொடி தீர்ப்பே எழுதப்பட்டுவிடும் .. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும் .. பொருள்புரியாத மொழிகளும் .. விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி உயர்நிலை பெற்றன ..
ஸ்ரீநரசிம்மர் ஹிரண்யனை சம்ஹாரம் செய்திட்டார் என்பது வெளிப்புறப் புராணம் .. ஆனால் அசுரசக்திகள் உலகில் பெருகி .. ஆறாம் அறிவாம் இறைப்பகுத்தறிவு மங்கியபோது .. பரிசுத்தமான தேவகுணங்களும் .. புனிதமான மனிதகுணங்களும் அருகியபோது .. அசுரகுணங்களைச் சீர்திருத்தி ஜீவன்களைக் காத்திட ஸ்ரீநரசிம்மர் தோன்றினார் .. எனவே தீய எண்ணங்கள் யாவுமே அசுரகுணங்களே !
அதாவது கலியுகமனிதன் ஆறாம் அறிவு உடையவனாக இருந்தாலும் அதனைப் பகுத்தறிவாகப்
(இறை)பிரகாசிக்கச் செய்வதைத்தடுத்து மறைப்பவைகளே வன்முறை அதிகாரம் .. ஆணவம் மமதை .. பகைமை .. குரோதம் .. விரோதம் .. பொறாமை .. லஞ்சம் . போர் போன்ற அதர்மமான அசுரசக்திகளாகும் .. எனவே மனிதன் மனிதனாக ஆறாம் இறைப் பகுத்தறிவுடன் வாழ உதவுவதே ஸ்ரீநரசிம்ம வழிபாடு ..

எனவே தீயகுணங்கள் அகன்று .. மனிதகுணங்கள் நன்கு விருத்தியாகி ஆறாம் அறிவாம் பகுத்தறிவுடன் பிரகாசித்திட ஸ்ரீநரசிம்ம வழிபாடு மிகவும் உதவும் .. ஸ்ரீநரசிம்மனைப் போற்றுவோம் ! அறிந்தோ அறியாமலோ செய்த தவறுகள் .. பாவங்களை மனசாட்சிப் பூர்வமாக உணர்ந்து இப்பிறவியிலேயே நீக்குவதற்கான வழிவகைகள் கிட்டிட அருள்புரிவாராக
“ ஓம் ஸ்ரீநரசிம்ஹாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
“ ஓம் ஸ்ரீநரசிம்ஹாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
No comments:
Post a Comment