SWAMY SARANAM.. GURUVE SARANAM GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD ANJANEYA .. MAY MARUTI NANDA BLESS YOU ALL FOR A SUCCESSFUL LIFE & ILLUMINATE YOUR LIFE WITH HAPPINESS & PROSPERITY .. " JAI SHREE HANUMAN ! JAI SHREE RAM




" அனுமனைப் பாடு மனமே ! உன்னை அணுவும் அணுகாது பயமே ! நாள்தோறும் ஸ்ரீராம ஜெயமே சொல்லும் வாழ்க்கையில் எல்லாம் இன்பமயமே 
என்றும் அவனை நினைத்தால் போதும் எதிர்ப்புகள் எல்லாம் மறந்தே போகும் கவலை என்பது மலை 
என்றாலும் கவலைவேண்டாம் அவன்கை தாங்கும் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
சனிக்கிழமையாகிய இன்று மதியம்வரை மூலநட்சத்திரமும் கூடுவதால் அஞ்சனை மைந்தன் 
ஸ்ரீஆஞ்சனேயனைத் துதித்து தங்களனைவருக்கும் புத்தி .. பலம் .. கீர்த்தி .. தைரியம் .. மனோபலம் போன்றவற்றை தந்தருள்வானாக !
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே ! 
வாயுபுத்ராய தீமஹி ! 
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத் !!
மாதந்தோறும் வருகின்ற மூலநட்சத்திர நாளில் அஞ்சனை மைந்தனை .. ஆஞ்சநேயனை வணங்கி வழிபடுவது மிகவும் பலன் தரும் .. மனதில் பலம் சேர்க்கும் என்பது உறுதி .. ஆஞ்சநேயரின் திருநட்சத்திரம் மூலம் .. இதுவே அவரின் ஜென்ம நட்சத்திரம் என்கிறது புராணம் ..
வாரந்தோறும் சனிக்கிழமையில் அனுமனுக்கு விசேஷ ஆராதனைகள் நடப்பதுபோல் மாதந்தோறும் மூலநட்சத்திர நன்னாளில் அனுமனுக்கு சிறப்பு பூஜைகளும் .. வழிபாடுகளும் நடைபெறுகின்றன ..
மூலநட்சத்திரம் ராமபக்த அனுமனுக்கு உகந்தது .. வெற்றிலைமாலை .. கையளவு வெண்ணெய்கொண்டு சார்த்தி அனுமனை வணங்க நம் காரியத்தில் வீரியத்தையும் .. வெற்றியையும் தந்தருளி நம் வாழ்வையே குளிரப்படுத்தி விடுவார் .. 
அனுமன் சாலீசா படிப்பதோ கேட்பதோ இன்னும் பலனையும் .. பலத்தையும் .. வளத்தையும் தந்தருளும் என்பது உறுதி ..
பஞ்சபூத தத்துவம் சீரஞ்சீவியான அனுமன் வாயுபுத்ரன் என்பதால் காற்றை வென்றவராகிறார் . சமுத்திரத்தை ராமநாமம் சொல்லியபடி தாண்டியதால் நீரை வென்றவராகிறார் .. 
பூமிபிராட்டியான சீதாதேவியின் பூரண அருளைப் பெற்றதால் நிலத்தை வென்றவராகிறார் ..
வாலில் வைத்த அக்னி ஜுவாலையால் இலங்கையை தகனம் செய்ததால் நெருப்பை வென்றவராகிறார் .. வானத்தில் நீந்திப் பறக்கும் ஆற்றல் பெற்றதால் ஆகாயத்தை வென்றவராகிறார் .. 
இப்படி பஞ்சபூதங்களையும் உள்ளடக்கிய ஆஞ்சநேயர் எங்கும் எதிலும் அடங்குவதில்லை .. ஆனால் .. “ ராமா “ என்ற இரண்டு எழுத்தில் மட்டும் கட்டுண்டு கிடக்கிறார்
தீயசக்திகள் .. காத்து .. கருப்பு .. பூதபிசாசங்கள் செய்வினை .. மனபேதலிப்பு .. சகலதோஷ தடைகள் அவரைப் பிரார்த்திப்பதால் நீங்குகின்றன .. “ அஞ்சேல்” என்று ஆசி கூறி அபயம் அளிக்கும் அனுமன் பாதம் பணிவோம் அனைத்து தோஷங்கள் .. தடைகள் .. தடங்கல்களும் நீங்கி வளமான வாழ்வினைப் பெறுவோமாக !
“ ஜெய்ஸ்ரீ ஆஞ்சநேயாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும் .
.
Image may contain: 1 person

No comments:

Post a Comment