PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM.. GURUVE SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY & A DIVINE SHASHTI THITHI TOO .. MAY LORD MURUGA BLESS YOU .. GUIDE YOU & REMOVE ALL THE SIN & SHOWER YOU WITH BEST HEALTH .. HAPPINESS & FULFILL ALL YOUR WISHES TOO .. " OM MURUGA "




” எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ 
சிந்தா குலமானவை தீர்த்தெனையாள் 
கந்தா கதிர்வேலவனே ! உமையாள் மைந்தா ! 
குமரா ! மறைநாயகனே ! போற்றி ! போற்றி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் கலியுகவரதனாம் கந்தனுக்கு உகந்த சஷ்டித் திதியும் கூடிவருவருவது சிறப்பு .. இன்றையநாள் தங்களனைவரது வேண்டுதல்கள் யாவையும் வேண்டியபடியே நிறைவேறிடவும் .. தடை தடங்கல்கள் யாவையும் நீங்கிடவும் .. எல்லாம் வல்ல முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
முருகப்பெருமானை ஆராதிக்கும் மூன்று முத்தான விரதங்கள் விரதநூல்களிலே சொல்லப்பட்டிருக்கின்றன .. அவை -
வார விரதம் ஒன்றும் - செவ்வாய் அல்லது வெள்ளி 
திதி விரதம் ஒன்றும் - சஷ்டி 
நட்சத்திர விரதம் - கார்த்திகை என அமைகின்றன ..
கலியுகவரதனும் .. தமிழ்க் கடவுளுமாகிய கந்தக்கடவுளாம் சுப்ரமணிய சுவாமிக்குரிய மூன்று விரதங்களில் மிகச்சிறந்தது “ கந்தசஷ்டி விரதமாகும் ..
சைவசமயிகள் முக்கியமாக கந்தபுராண கலாசாரத்தில் திழைக்கும் மக்கள் மற்றெல்லா விரதங்களையும் விட கந்தசஷ்டி விரதத்தை மிகவும் புனிதமாகவும் பக்திப்பூர்வமாகவும் கைக்கொள்கின்றார்கள் இவ்விரதமகிமைபற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசும் .. வசிட்டமாமுனிவர் .. முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு உபதேசித்த பெருமையையுடையது ..
அரசர்கள் .. தேவர்கள் .. முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து பேறுபெற்றனர் .. இவ்விரதம் தொடர்பான புராணக்கதையை சிந்திக்கலாம் .. 
சூரன் .. சிங்கன் .. தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலம் தேவர் .. மனிதர் முதலிய யாவரையும் துன்புறுத்தி அழிவு செய்துவந்தனர் ..
பரமசிவன் இதற்கொரு முடிவுகாணும் நோக்கில் தமது சக்தியையே முருகப்பெருமானாகப் பிறப்பித்தார் .. அந்த முருகப்பெருமான் இந்த சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறுநாட்கள் போரிட்டு வென்றார் .. இந்த அருட்பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்தகாலமாகிய ஐப்பசிமாத வளர்பிறை முதலாறு நாட்களையும் விரதநாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்றுவந்தனர் .. இதுவே கந்தசஷ்டி என்ற பெயரில் பூலோகத்தினரும் அனுஷ்டித்தனர் ..
ஆறுநாட் போரும் .. ஆறுபகைகளை வெல்லுதலைக் குறிக்கும் - 
சூரன் .. சிங்கன் .. தாரகன் மூவரும் -
ஆணவம் .. கன்மம் .. மாயை ஆகிய மும்மலங்களையும் .. 
தேவர்கள் - ஆன்மாக்களையும் ..
முருகப்பெருமான் - பரம்பொருளையும் உணர்த்தி நிற்கின்றனர் ..
இவ்விதம் முப்பொருள் உண்மையை விளக்குதலே இப்புராணத்தின் நோக்கமெனவும் .. ஆன்மாக்களாகிய நாம் எம்மைத் துன்பத்துள் ஆழ்த்தி நிற்கும் - 
காமம் .. குரோதம் .. லோபம் .. மோகம் .. மதம் .. மாற்சரியம் ஆகிய ஆறுபகைகளையும் ஆணவாதி மும்மலங்களையும் வென்று ஆண்டவனைச் சென்றடையவேண்டும் என்ற கருத்தையே கந்தசஷ்டி விரதமும் .. கந்தபுராணமும் வலியுறுத்துகின்றன ..
கந்தனைப் போற்றுவோம் ! நம் கவலைகளை மறப்போமாக ! 
“ஓம் சரவணபவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
Image may contain: 1 person, text

No comments:

Post a Comment