” சைத்ரக்ருஷ்ணே து பஞ்சம்யாம்
ஜக்ஞே நாராயண ஸ்வயம்
புவம் வராஹரூபேண
ஸ்ருங்கப்யாம் உததேர் பலாத் “
(தினசரி கூறுவது சிறப்பு)
ஜக்ஞே நாராயண ஸ்வயம்
புவம் வராஹரூபேண
ஸ்ருங்கப்யாம் உததேர் பலாத் “
(தினசரி கூறுவது சிறப்பு)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் பெருமாளின் 10 அவதாரங்களில் மூன்றாவது அவதாரம் “ பூமியைக்காக்க “ என்று பெருமாள் எடுத்த அவதாரமே வராஹ அவதாரமாகும் .. இன்று பஞ்சமித் திதியும் கூடிவருவது மேலும் சிறப்பாகும் .. பகவானைப் போற்றித் துதித்து நிலைத்த செல்வம் பெருகவும் .. நோயற்ற வாழ்வும் தங்களைவருக்கும் அமைந்திட ஸ்ரீவராஹபெருமாளைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே !
பூமிபாலாய தீமஹி !
தந்நோ வராஹ ப்ரசோதயாத் !!
பூமிபாலாய தீமஹி !
தந்நோ வராஹ ப்ரசோதயாத் !!
நாம் வாழும் இந்த கல்பமே ஸ்வேத வராஹ கல்பம் .. வராஹர் வழிபாடு செய்வோரின் வம்சத்திற்கு அழிவு என்பது இல்லவே இல்லை .. ருண .. ரோக .. சத்ரு முதலானவற்றால் வரும் பயங்கள் இல்லாதுபோகும் அதேசமயம் அதிகமான புண்ணியம் செய்தவர்களால் தான் வராஹ உபாசனை செய்யமுடியும் ..
சொந்த வீடுவாங்க .. நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் சாதிக்க வராஹர் அருள் அவசியமானதொன்று .. ஸ்ரீமன் நாராயணன் வராஹ அவதாரம் எடுத்து பூமியை கவர்ந்துசென்ற ஹுரண்யாசுரன் என்னும் அசுரனைக் கொன்றார் ..
பின் அப்பூமியை தனது கோரைப்பற்களினால் சுமந்துவந்து ஆதிசேஷன்மேல் முன்னிருந்த நிலையில் நிலைக்கச்செய்து .. தனது இரண்டு கண்களினின்றும் அசுவத்த விருட்சத்தையும் (அரசமரம்) துளசியையும் உண்டாக்கி .. தனது வியர்வை நீரின் பெருக்கைக்கொண்டு நித்யபுஷ்கரணி என்ற புனிததீர்த்தத்தையும் ஏற்படுத்தி .. ஸ்ரீமுஷ்ணம் என்னும் இத்தலத்தை இருப்பிடமாக ஏற்றார் .. பிரம்மன் முதலானோர் பூஜிக்க “ஸ்ரீபூவரகான்” என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார் ..
வராஹ பெருமாளின் பரிபூரண அனுக்ரஹம் பெற்று வளமோடும் என்றும் நலமோடும் வாழ்வீர்களாக !
“ ஓம் ஸ்ரீபூவராஹ சுவாமி திருவடிகளே சரணம் “
“ ஓம் ஸ்ரீபூவராஹ சுவாமி திருவடிகளே சரணம் “
No comments:
Post a Comment