GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY & A DIVINE " PRADOSHAM " TOO .. MAY LORD RELIEVE YOU FROM ALL THE SINS & OBSTACLES FROM YOUR LIFE & SUCCESS & PEACE BE UPON YOU FOREVER .. " HARA HARA MAHAADEVAA ! JAI BHOLE NATH SWAMY SARANAM...GURUVE SARANAM "


Image may contain: indoor
Image may contain: indoor

பேரிடர் நீங்கும் பிணியாதாயினுஞ் சாம்பலாகுமே ! 
மறைபோற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும் ! சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே ! பூதலத்தே நின்ற சிவனம்பலமெலாம் ஏகித்தெழுதபேறு பெற ப்ருஹந்நாயகியுறை தக்ஷிணமேரு தன்னை கைதொழுதக்கால் சிவனே தரிசனம் தருவான் ! பொய்யல்ல தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன் தொழுபவர்க்கே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ விரதமும் அனுஷ்டிக்கப்படுகின்றது .. மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தேயிருத்திக் காத்தவேளையே பிரதோஷவேளையாகும் (மாலை 4.30 - 6.00 மணிவரையிலான காலவேளையில் ) சிவாலயம் சென்று ஈசனுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையை நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கூடாகக் கண்டு தரிசித்து .. நிம்மதியும் .. சந்தோஷத்தையும் .. சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுய்வீர்களாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
பிரதோஷ பூஜையின் மகத்துவம் யாதெனில் இதில் திரள்வது புண்ணிய சக்திகள் மட்டுமல்லாது இன்றைவனே ! பிரதோஷவேளையில் (மாலை 4.30 - 6.00 மணிவரை) திருநடனக்காட்சி அளிப்பதால் நடராஜத் தத்துவமாகிய “ அனைத்தும் எப்போதும் இறையருளால் இயங்குவதே “ என்ற பேருண்மையை நன்கு உணர்த்துவதாகும் ..
மீனாட்சி ஸுந்தரேஸ்வர ஹாலாஸ்ய நாத ஸ்தோத்திரம் - 
“பக்தார்தி பஞ்ஜனபராய பராத்பராய 
காலப்ரகாந்தி கரளாங்கித கந்தராய 
பூதேஸ்வராய புவனத்ரய காரணாய
ஹாலாஸ்ய மத்ய நிலயாய நமஸ்ஸிவாயா “
பொருள் - பக்தர்களுடைய மனக்கவலையைப் போக்கி அருள்பவரே ! மீனாட்சி சுந்தரேஸ்வரா ! 
நமஸ்காரம் ! பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்டவரே ! பிரளயகால மேகம் போன்ற அருட்திரட்சி கொண்டவரே ! பிரதம கணங்களுக்கு ஈஸ்வரரானவரே ! மூவுலகங்களையும் படைத்தவரே! காலகூடவிஷத்தை அருந்தியதன் அடையாளமான கழுத்தை உடையவரே ! ஹாலாஸ்ய ஷேத்திரம் எனப்படும் மதுரையம்பதியில் வசிப்பவரே ! 
மீனாட்சி சுந்தரேஸ்வரா ! நமஸ்காரம் !!
பிரதோஷ தினங்களில் இத்துதியைப் பாராயணம் செய்து சிவ அபச்சாரம் நீங்கி சகலமங்களங்களையும் பெறுவோமாக ! 
” ஹர ஹர மகாதேவா ! ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 

Image may contain: 2 people

No comments:

Post a Comment