PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM..GURUVE SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY & MAY THE BLESSINGS OF LORD NAARAAYANAA & MAA LAKSHMI BE EVER UPON YOU WITH LOVE .. PEACE & STRENGTH SURROUNDS YOU .. " OM HARI OM "



” பையப் பையப் பயில்வாய் அலையாதிருக்கவே ! மெய்ப்பொருளின் சித்தத்தை நிலைநிறுத்தவே ! 
குருவின் பாதகமலத்தில் குறையாபக்தி வைப்பாயேல் பிறவிச் சிறையினின்று துரிதம் மீள்வாய் உறுதி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மேலானவற்றுக்கெல்லாம் மேலானவனும் .. எவராலும் பக்தியால் அடையக்கூடிய ஒப்பற்றவனாகிய ஸ்ரீவிஷ்ணுபகவானைப் புதன்கிழமையாகிய இன்று துதித்து .. மனதில் நிம்மதியும் .. வாழ்வில் நல்முன்னேற்றத்தையும் தந்தருள்வானாக !
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
சாதாரண மனிதர்களின் பாதங்கள் என்று கூறப்படுவது .. மகான்களுக்கும் .. இறைவனுக்கும் குறிப்பிடும்போது “ திருவடி “ என்றழைக்கப்படுகிறது ஒருவர் தவறு செய்துவிட்டால் வெறுமனே மன்னிப்பு என்று கேளாமல் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினால் உடனேயே மன்னிப்போ அல்லது தண்டனை குறைப்போ கிடைக்கும் .. ஆனால் இறைவன் இறைவன் திருவடியில் சரணாகதி ஆகி .. தவறுக்கு மனமுருகி மன்னிக்கவேண்டினால் சாதாரணமக்களே மனம் இரங்கும்போது மகேசன் மனம் இரங்காதோ..?
மன்னன் பலியின் சிரசில் தன் திருவடியை அழுத்தி பாதாளலோகத்தில் அதிபதி ஆக்கினார் .. 
பிரகலாதனுடைய பக்தியின் தாக்கம் பேரன் மகாபலி சக்கரவர்த்திவரை வந்து பகவான் திருவடி சம்மந்தப்பேற்றினை அடைந்தான் .. 
ராமாவதாரத்தில் சாபம் நீங்கி கல்லாயிருந்த அகலிகை அழகு மங்கையானது ஸ்ரீராமரின் திருவடிகடாக்ஷ்மே !
பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமனின் திருவடி அருகே ஏன் அன்னை மஹாலக்ஷ்மி அமர்ந்திருக்கிறாள் என்றால் .. ஜீவன்கள் முக்தி அடைந்ததும் எம்பெருமான் நாராயணனின் திருவடிகளை சேர்கின்றன .. அப்படி சேர்ந்த ஜீவன்களின் சிறு சிறு பாவங்களை களைந்து தூய ஆத்மாவாக இறைவனை அடையச் செய்பவள் கருணையே வடிவான அன்னை மஹாலக்ஷ்மி .. அதனால் தான் திருவடி அருகே இருக்கிறாள் ..
இறைவனின் நேரடி ஸ்பரிசம் நமக்குக் கிட்டுவதில்லை இதற்காகவே இறைவனின் திருவடியாக வெள்ளியிலான உலோக தொப்பி போன்ற சடாரியை கர்ப்பகிரஹத்திலிருந்து எடுத்து வந்து பக்தர்களின் சிரசில் வைப்பார்கள் .. 
சடாரி என்பது - இறைவனின் திருவடியாக சொல்லப்படுகிறது .. எனவே ஒவ்வொருவருக்கும் சடாரி வைக்கும்போது சாட்சாத் பெருமாளின் திருவடியை நாம் நம் சிரசில் தாங்கிக் கொள்வதற்கு இது ஒப்பாகும் ..
பகவானின் திருவடிதனை நம் சிரசில் ஏற்பதால் நம் துர்க்குணங்கள் விலகி நேர்மறை சிந்தனைகள் பெருகி உடலாரோக்கியம் கிட்டும் .. பெருமாள் திருவடிசூடி பேரின்பம் காண்போமாக ! 
“ ஓம் நமோ நாராயணாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 Image may contain: 3 people


No comments:

Post a Comment