தேவுநீ எனச்சார்ந்தேன் ஒப்பிலியப்பா !
தெளிமனம் .. மேவுசீர் ஒளிவிளக்கே !
விண்ணகர் விளங்கி யோங்கும் கோவேயென் ஆவிக்கோர் கொழுகொம்பே ! வினைமா சகல பூவேகொண்டேத்திப் புனிதம் பெற அருள்வாய் எந்தையே “
தெளிமனம் .. மேவுசீர் ஒளிவிளக்கே !
விண்ணகர் விளங்கி யோங்கும் கோவேயென் ஆவிக்கோர் கொழுகொம்பே ! வினைமா சகல பூவேகொண்டேத்திப் புனிதம் பெற அருள்வாய் எந்தையே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று பெருமாளுக்கு உகந்த “ திருவோண “ நட்சத்திர நாளாகிய இன்று
“ ஸ்ரவண விரதம் ” அனுஷ்டிக்கப்படுகின்றது .. இனிய மெய்யன்பர்கள் தங்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி .. அன்பும் .. ஒற்றுமையும் நிறைந்திட ஸ்ரீஒப்பிலியப்பனைப் பிரார்த்திக்கின்றேன் !
“ ஸ்ரவண விரதம் ” அனுஷ்டிக்கப்படுகின்றது .. இனிய மெய்யன்பர்கள் தங்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருகி .. அன்பும் .. ஒற்றுமையும் நிறைந்திட ஸ்ரீஒப்பிலியப்பனைப் பிரார்த்திக்கின்றேன் !
ஓம் நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
“ ஸ்ரவண விரதம் “ என்பது மாதாமாதம் வரும் திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளுக்கு மேற்கொள்ளும் ஒரு விரதம் .. இந்த விரதமிருப்பதால் கல்விச் செல்வம் .. கேள்விச்செல்வம் மற்றும் பொருட்செல்வம் அனைத்தும் பெருகும் ..
திருமகள் நாயகனாம் திருமால் அர்ச்சாவதாரம் கொண்டு விளங்கும் 108 திவ்யதேசங்களில் நெஞ்சை அள்ளும் தஞ்சைமாவட்டத்தில் திருவிண்ணகர் என்று போற்றப்படும் துளஸீவன ஷேத்ரத்தில் எம்பெருமான் ”தன் ஒப்பார் இல் அப்பனாக “ எழுந்தருளியுள்ளார் ..
மார்க்கண்டேய மகரிஷி பூமிதேவித் தாயாரை மகளாக அடையும் பாக்கியம் பெற்றவர் .. உப்பை தியாகம் பண்ணி தன் பெண்ணை மணக்கச்சித்தமான வயோதிகரை புறக்கண்ணைமூடி அகக்கண்ணைத் திறந்து பார்த்தால்தானே தெரிகிறது நிற்பவர்
“ ஓங்கி உலகளந்த உத்தமன் பொன்னப்பன் .. மணியப்பன் .. முத்தப்பன் .. என்னப்பன் ..
தன் ஒப்பார் இல் அப்பன் அல்லவா இவன் என்று !மனமகிழ்ந்து தன் பெண்ணை பூமிதேவிப்பிராட்டியை கன்னிகாதானம் செய்து கொடுக்கிறார் மார்கண்டேய மகரிஷி ..

ஒவ்வொருமாதமும் ஸ்ரவண திருநாளில் காலை 11.00 மணிக்கு “ ஸ்ரவண தீபதரிசனம்” செய்யலாம் .. திருவோண நட்சத்திரமான இன்று ஆலயம் சென்று மஹாவிஷ்ணுவைத் தரிசித்து வாழ்வில் நல்ல திருப்பங்களை பெறுவோமாக !
“ ஓம் நமோ நாராயணாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் நமோ நாராயணாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment