PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM... GURUVE SARANAM....OOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY & A HAPPY WEEKEND TOO .. MAY LORD HANUMAN SHOWER YOU WITH GOOD STRENGTH .. POWER & WISDOM & FULFILL LL YOUR DESIRES TOO .. " JAI SHREE RAM ! JAI SHREE HANUMAN "


Image may contain: 1 person, flower
Image may contain: 2 people, indoor
Image may contain: indoor


ஆயுள் வளரும் உன்னாலே ! 
அழகும் வலிவும் உன்னாலே ! 
பாயும் நோயும் பல்பகையும் பறந்து போகும் உன்னாலே ! கோயில் எனது நெஞ்சகமாம் ! 
கூறும் கவிதை மந்திரமாம் ! தேயம் தழுவும் புகழானே! 
சித்தம் இரங்காய் அனுமானே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சனிக்கிழமையாகிய இன்று சக்தியும் நல்ல புத்தியும் கொடுக்கும் சமய சஞ்சீவி ஸ்ரீராமனின் தூதனாகிய ஸ்ரீஆஞ்சநேயனைத் துதித்து கவலைகள் மலையளவு என்றாலும் அனைத்தையும் தகர்த்து .. தைரியம் .. மனோபலத்தையும் தந்தருள்வானாக !
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே ! 
வாயுபுத்ராய தீமஹி ! 
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத் !!
அஞ்சனையின் மகனாக அவதரித்தவரும் .. தெய்வீக புருஷரும் .. அனந்தன் என்னும் ஆதிசேஷனால் போற்றி வணங்கப்படுபவராகிய ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பாகும் ..
அனுமனுக்கு பிடித்த அர்ச்சனை பொருட்கள் - 
வடைமாலை .. வெற்றிலைமாலை .. துளசிமாலை .. சிந்தூரம் .. பசுநெய் .. பழங்கள் ..
ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராமகடாக்ஷ்ம் பெற்று நல்ல கல்வி செல்வம் பெறலாம் 
அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை எடுத்துரைத்தபோது மகிழ்ந்த சீதை அருகில் வளர்ந்திருந்த வெற்றிலையிஅக் கிள்ளி அனுமனின் சிரசில் வைத்து ஆசீர்வதித்தாள் .. “ இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும் என்று “ .. வெற்றிலையைக் காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றிபெற வெற்றிலைமாலை ஆஞ்சநேயருக்கு சாத்துகின்றனர் ..
திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது மணமக்களுக்கும் அவர்களை ஆசீர்வதிப்பவர்களது வாழ்க்கையும் வெற்றிகரமாக அமையவேண்டும் என்பதற்குத்தான் .. 
வடைமாலை அணிவித்து தானம் செய்தால் செல்வ வளம் பெருகும் ..
ராம ராவண யுத்தத்தின்போது ஸ்ரீராமனையும் .. லக்ஷ்மணனையும் தன் தோளில் சுமந்துகொண்டு அனுமான் சென்றபோது ராவணனால் சரமாரியாகத் தொடுக்கப்பட்ட சக்திமிகுந்த அம்புகளால் தாக்கப்பட்ட அந்தக் காயத்திற்கு மருந்தாகத் தன் உடம்பில் வெண்ணை பூசிக்கொண்டாராம் .. வெண்ணை சீக்கிரமாக உருகும் தன்மை கொண்டது .. அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்தகாரியம் நடந்துவிடும் என்ற நம்பிக்கை அதனால் வெண்ணை சாத்தும் பழக்கம் ஏற்பட்டது ..
அனுமனை வழிபட்டு ஆசிபெறுவோமாக ! 
“ ஜெய்ஸ்ரீராம் ! ஜெய்ஸ்ரீஹனுமான் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 8 people, people smiling

Image may contain: indoor

No comments:

Post a Comment