PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY & MAY THE LOVE & BLESSINGS OF LORD KRISHNA FILL YOUR LIFE WITH HAPPINESS & PROSPERITY .. " JAI SHREE KRISHNA s SWAMY SARANAM GURUVE SARANAM





” சிறுபாத சதங்கை குலுங்கிடவே நீ வரவேண்டும் !
உன் தித்திக்கும் வேணுகானம் கேட்டிட வேண்டும்
திருதுளாய் மணமும் கமழ்ந்திடவேண்டும் 
உன் திவ்ய ரூபதரிசனமும் கிடைத்திடவேண்டும் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் புதன்கிழமையாகிய இன்று “ ரோகிணி “ நட்சத்திரமும் கூடிவருவது மேலும் சிறப்பைத்தருகின்றது .. மஹாவிஷ்ணுவின் 9வது அவதாரமாகிய ஸ்ரீகிருஷ்ணபகவானை இன்று போற்றித் துதித்து பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆசீர்வாதமும் தங்கள் இல்லத்திற்கும் .. உள்ளத்திற்கும் கிடைக்கப் பிரார்த்திப்போமாக !
ஓம் மஹாபுருஷாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத் !!
கிருஷ்ண அவதாரத்தில் பகவான் பாஞ்சஜன்யம் என்ற சங்கையும் .. சுதர்சனம் என்ற சக்கரத்தையும் ஆயுதமாகக் கொண்டார் ..
யுகங்கள் நான்கு - கிருதயுகம் .. திரோதாயுகம் .. துவாபரயுகம் .. கலியுகம் ஆகும் .. இந்த நான்கும் சேர்ந்தால் ஒருசதுர்யுகம் (101) ஆகும் .. ஒவ்வொரு சதுர்யுகமும் முடிந்து முதல்யுகமான கிருதயுகம் தோன்றும் .. பகவான் பல சதுர்யுகங்களில் பலமுறை அவதாரம் எடுத்து உள்ளார் ..
“ பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய சதுஷ்க்ருதாம் !
தர்ம ஸம்ஸ்தா பநார்தாய ஸம்பவாமி யுகே ! யுகே “
(கீதை - 4-8)
எப்பொழுது எங்கு தர்மம் தலைசாய்ந்து அதர்மம் தலையோங்குகிறதோ !! அப்பொழுது அங்கு அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் யுகம் தோறும் அவதரிக்கின்றேன் ! என்று கிருஷ்ணபகவான் பகவத்கீதையில் நேரிடையாகக் கூறியுள்ளதற்கிணங்க அவரின் அவதாரம் திகழ்கின்றது ..
கிருஷ்ணரின் அருளைப் பெற “ கீத கோவிந்தம் “ .. ஸ்ரீமன் நாராயணீயம் “ .. “ கிருஷ்ண காணாம்ருதம் “ ஆகிய ஸ்தோத்திரங்களால் துதித்து வணங்கவேண்டும் ..
கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும் .. குழந்தைகளுக்கு மூர்க்ககுணம் ஏற்படாது .. இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வார்கள் .. அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்
பெண்கள் கண்ணனை மனமுருகி போற்றி வழிபட்டால் திருமணத் தடைகள் விலகி கல்யாணம் கைகூடும் ..
விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும் .. மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன் தீரும் ..
கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களுக்கும் .. கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி ..
“ ஓம் நமோ பகவதே வாசுதேவாயா “ என்று ஜெபித்தால் ஸ்ரீகிருஷ்ணர் பார்வை படும் ..
மஹாவிஷ்ணு எடுத்த 9வது அவதாரம் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்யவேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் ஸ்ரீகிருஷ்ணர் உணர்த்தியுள்ளார் ..
பகவானைப் போற்றுவோம் ! வாழ்வில் பரிபூரணமான நிறைவையும் .. மகிழ்ச்சியையும் தந்தருள்வாராக !
“ ஜெய் ஸ்ரீகிருஷ்ணா “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person

No comments:

Post a Comment