” மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கரசன் மந்திரி ! நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக் கதிபனாகி நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும் இறையவன் குருவியாழன் இருமலர்ப் பாதம் போற்றி ! போற்றி “
(நல்வாழ்க்கை அமையும்)
(நல்வாழ்க்கை அமையும்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் குருவருளும் இறையருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்று .. வாக்கிற்கும் .. அறிவுக்கும் அதிதேவதையான குருபகவான் பிரஹஸ்பதியைத் துதித்து தங்களனைவரது தோஷங்கள் யாவும் நீங்கப்பெற்று .. கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கவும் .. மகிழ்ச்சியும் நல்லாரோக்கியமும் பெற்றிடவும் குருபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் வ்ருஷப்த்வஜாய வித்மஹே !
க்ருணி ஹஸ்தாய தீமஹி !
தந்நோ குரு ப்ரசோதயாத் !
அதிதேவதா ப்ரயதிதேவதா ஸகித
ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ !!
க்ருணி ஹஸ்தாய தீமஹி !
தந்நோ குரு ப்ரசோதயாத் !
அதிதேவதா ப்ரயதிதேவதா ஸகித
ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ !!
நவக்கிரகங்களில் ஐந்தாவது இடத்தைப் பெறுவது குரு நவக்கிரக சன்னிதிகளில் நவக்கிரகங்களுள் ஒருவராக குரு அமர்ந்திருப்பார் .. அவருக்கு தேவகுரு .. பிரஹஸ்பதி .. வியாழபகவான் எனப் பலபெயர்கள் உண்டு ..
பிரஹஸ்பதி என்றால் - அறிவில் சிறந்தவர் என்றும்
குரு என்றால் - இருளைப் போக்குபவர் என்றும் பொருள் ..
பிரஹஸ்பதி என்றால் - அறிவில் சிறந்தவர் என்றும்
குரு என்றால் - இருளைப் போக்குபவர் என்றும் பொருள் ..
ஜோதிடப்படி குருபலம் இருந்தால்தான் எதிலும் வெற்றி பெறமுடியும் என்பது நம்பிக்கை .. குருவைப் பொறுத்தமட்டில் பெயர்ச்சி ஆவதற்கு முன்னரே பெயர்ச்சி பலன்களைக் காட்டிவிடக்கூடியவர் .. அதனால் குருப்பெயர்ச்சிக்கு முன்னரும் .. அன்றும் .. பின்னரும் வழிபடுவதால் கேட்டவரம் பெற்று மனமகிழ்ச்சியை அடையலாம் .. குரு சந்நிதியில் நின்று கோரிக்கைகளை மனதார நினைத்தாலே போதும் அவற்றைக் காலாகாலத்தில் நிறைவேற்றி நலம்பல பெறவைப்பார் என்பது ஐதீகம் ..
குழந்தைகள் நல்லபடியாக படித்து முன்னேறவும் குருபகவான் தான் அருளவேண்டும் .. கல்வியில் முன்னேற்றம் .. வேத வேதாந்த சாஸ்திர அறிவு .. நல்ல புத்தி .. ஞாபகசக்தி அனைத்தையும் வழங்குபவர் குருபகவான் தான் .. படித்தேறிய குழந்தைகளுக்கு உரிய பதவியை வழங்குபவரும் குருபகவானே !
” குருபார்க்க கோடி நன்மை “ என்பது பழமொழி .. அத்தனை சக்திவாய்ந்தது குருவின் பார்வை .. இவர் அமரும் வீட்டைவிட .. பார்க்கும் வீட்டிற்கு தான் யோகம் அதிகம் ..
வியாழனன்று மஞ்சள் நிற பட்டு சாத்தி .. கடலை நிவேதனம் செய்து குருஸ்லோகம் சொல்லி வழிபட்டால் வாழ்வில் சுகம் உண்டாகும் ..
குருபகவானைப் போற்றுவோம் ! நல்ல வாக்குவன்மையும் .. ஞானத்தையும் பெறுவீர்களாக !
“ ஓம் ஸ்ரீ குருவே நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
குருபகவானைப் போற்றுவோம் ! நல்ல வாக்குவன்மையும் .. ஞானத்தையும் பெறுவீர்களாக !
“ ஓம் ஸ்ரீ குருவே நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment