SWAMY SARANAM..GURUVE SARANAM.GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY & A DIVINE PUNARVASU STAR (PUNARPOOSAM) SHREE RAMA IS THE 7TH AVATAR OF LORD VISHNU .. IT IS BELIEVED THAT A CALMNESS ENGULFS AS ONE INDULGES IN WRITING THE "SHREE RAMA JEYAM " .. BRINGING IN MORE CLARITY OF MIND .. TOLERANCE & STRENGTH TO WITHSTAND OBSTACLES IN LIFE .. " JAI SHREE RAM " .. STAY BLESSED..


 கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ ! 
அந்தி காலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் சந்தி தர்ப்பணங்களும் ஜபங்களும் தபங்களும் சிந்தை மேவு ஞானமும் தினம் ஜபிக்கும் மந்திரமும் எந்தை ராம ராமராம ராம என்னும் நாமமே “ (நம்மாழ்வார்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சனிக்கிழமையாகிய இன்று ஸ்ரீராமனுக்கு உகந்த புனர்பூச நட்சத்திரமும் கூடிவருவது சிறப்பே ! இந்நாளில் தங்களனைவரின் இன்னல்கள் யாவும் களையப் பெற்று .. நல்லாரோக்கியமும் .. வாழ்வில் மகிழ்ச்சியும் என்றும் நிலைத்திட ஸ்ரீராமபிரானைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தசரதாய வித்மஹே ! 
சீதாவல்லபாய தீமஹி ! 
தந்நோ ராம ப்ரசோதயாத் !!
மனிதன் உலகில் எப்படி வாழவேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீராமாவதாரம் ! பங்குனிமாதம் புனர்பூச நட்சத்திரத்தில் கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன ..
தர்மம் காக்க அவதரித்த ஸ்ரீராமன் தர்மம் அழிந்து அதர்மம் தலை எடுக்கும்போதெல்லாம் மண்ணுலகையும் .. மக்களையும் காக்க மஹாவிஷ்ணு அவதாரங்கள் எடுத்தார் என்கின்றன புராணங்கள் ..
இதில் 7வதாக எடுத்த ராம அவதாரமாக இருந்ததால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது .. முந்தைய அவதாரங்களான மச்சம் .. கூர்மம் .. வராகம் .. நரசிம்மம் .. வாமனர் .. பரசுராமர் ஆகியவை நீர்வாழ்வனவாகவும் .. விலங்காகவும் .. விலங்கும் மனிதனும் இணைந்தும் காணப்படும் ..
இந்த ராம அவதாரத்தில் தான் மனிதர்கள் படும் அனைத்து இன்னல்களையும் இறைவனும் அனுபவித்து .. அதன்மூலம் மக்களுக்கு பாடம் புகட்டியிருக்கிறார் ..
ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாக உதித்த ராமன் .. சீதாதேவியை மணந்து .. ஏகபத்தினி விரதனாக இருந்தார் .. தந்தை செய்துகொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றினார் ..
அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்து மக்களைக் காத்தார் .. இவரது சிறப்புகளை விளக்கும் ராமாயணம் நமது இதிகாசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது .. இதில் ராம அவதாரத்தைப் பற்றியும் அவர் செய்த சாதனைகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துக்கூறுகிறது ..
ஸ்ரீராம நாமத்தின் மகிமை பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணையானது .. ராமநாமம் சொல்வதும் ராமநாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும் .. பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப்படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது .. இறைஞானத்தைத் தூண்டுகிறது .. அறியாமை .. காமம் .. தீய இயல்புகளைச் சுட்டுப் பொசுக்குகிறது .. உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள்கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை .. 
ராம நாமத்தைச் சொல்லி தசரத மைந்தனின் அருட்கடாக்ஷத்தைப் பெறுவோமாக !
” ஸ்ரீராம் ஜெயராம் ! ஜெயஜெயராம் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 5 people

No comments:

Post a Comment