” கோல்வரை மத்தென்ன நாட்டிக் கோளரவு சுற்றிக் கடைந்தெழுந்த ஆலநஞ்சு கண்டவர் மிகவிரிய அமரர்கட்கருள் புரிவது கருதி நீலமார் கடல்விடந்தனை யுண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த சிலங்கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன் கூருளானோ “ (சுந்தரர்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் திங்கட்கிழமையாகிய இன்று ஈசனுக்கு உகந்த சோமவார விரதமும் .. பிரதோஷமும் கூடிவருவது சிறப்பு .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் வெற்றிமிகுந்த நன்னாளாகவும் .. துயர்களைந்து என்றும் மகிழ்ச்சியுடன் திகழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
சோமவாரமும் பிரதோஷமும் கூடிவருவதால் இதனை “ சோமவார பிரதோஷம் “ என்றழைப்பார்கள் .. சோமவார பிரதோஷம் அனைத்து தோஷங்களையும் நீக்கவல்லது .. சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம் .. ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனைத் தரவல்லது ..
ஆலயவழிபாடு உடல் நலத்தையும் ..
திருமுறைகளை ஓதுவதால் வாக்கு நலத்தையும் ..
மந்திரங்களை ஜெபிப்பதால் மனநலத்தையும் தந்து நம்மைக்காக்கும் ..
திருமுறைகளை ஓதுவதால் வாக்கு நலத்தையும் ..
மந்திரங்களை ஜெபிப்பதால் மனநலத்தையும் தந்து நம்மைக்காக்கும் ..
இந்நாளில் மாலை 4.30 முதல் 6.00 மணிவரையிலான நேரமே பிரதோஷ காலமாகும் .. இந்நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்பட்ட துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை ..
மேலும் சிவபெருமானின் தரிசனத்திற்குள் செல்பவர்கள் முதலில் நந்திபகவானை வணங்கிவிட்டுத்தான் செல்லவேண்டும் .. நந்திபகவானின் அனுமதி பெற்று சிவபெருமானை நந்திபகவானின் கொம்புகளுக்கிடையேயுள்ள வழியாக தரிசித்துவிட்டுச் செல்லவேண்டும் ..
“ சிவாய நம “ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறி வணங்கிட நமது வறுமை .. கடன் .. நோய் .. மரணபயம் எல்லாம் நீங்கி அனைத்து செல்வங்களும் கிட்டும் .. சிந்தையில் உறையும் சிவனின் பொற்பாதங்களில் சரணடைவோமாக !
“ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
“ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
No comments:
Post a Comment