PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM... GURUVE SARANAM...Maheswari Somapalan 2 hrs · GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY & A DIVINE " PARAMA EKADASI " PARAMA EKADASI IS THEREFORE ALSO KNOWN AS " PURUSHOTTAM KAMALA EKADASI " .. IT IS BELIEVED THAT OBSERVING THIS EKADASI BRINGS MATERIAL PROGRESS & WASHED AWAY ALL THE SINS COMMITTED DURING LIFE TIME .. FASTING IS NOT ABOUT DIET OR BURNING CALORIES .. BUT .. BURNING OF PRIDE .. EGO & SINS .. "OM HARI OM "






” கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் ! 
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்றார்த்தும் வண்டார் தண்ணந் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல் பண் தான் பாடி நின்றாடிப் பரந்து திரிகின்றனவே “ ( நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த ஏகாதசித் திதியும் கூடிவருவது சிறப்பு .. இன்றைய நாள் தங்களைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
இன்றைய ஏகாதசித் திதியை “ பரம ஏகாதசி “ என்றழைப்பார்கள் .. ஒருவரின் பாவவினைகள் அனைத்தையும் அழித்துவிடும் மற்றும் ஜட இன்பத்துடன் கூடிய முக்தியையும் தரவல்லது .. மாதங்களில் சிறந்தது “ லீப்வருடமாதம் “ இந்த “அதித” மாதத்தில் வரக்கூடிய ஏகாதசிகள் “பரம” மற்றும் “பத்மினி” என்பன பகவான் ஹரிக்கு மிகவும் பிரியமானவை ..
புராணவரலாற்றில் ஒன்று - 
கம்பில்ய நகரில் தெய்வபக்தி மிகுந்த ஒரு அந்தணர் வசித்து வந்தார் .. அவர் பெயர் சுமேதா .. அவரது மனையின் பெயர் பவித்ரா .. சில பாவவிளைவுகளால் அந்த அந்தணர் மிகவும் ஏழையானார் .. பிச்சை எடுத்தும் வாழ்க்கை நடத்தமுடியவில்லை .. உண்ண உணவோ அணிவதற்கு ஆடையும் இருக்கவில்லை .. மற்றும் உறங்குவதற்கும் ஒரு இடமும் இல்லை ..
அப்படியிருந்தும் அவரது மனைவி உறுதியுடன் அவருக்கு சேவை புரிந்தாள் .. தான் பட்டினியாக இருந்தாலும் தன் முகத்தில் சோர்வை காட்டாமலும் இதைப்பற்றி ஒருபொழுதும் குறைகூறாமலும் இருந்தாள் .. ஆனால் தன் மனைவி நாளுக்கு நாள் உடல் மெலிந்து நலிவுருவதைக் கண்ட அந்தணர் தான் வெளியூர் சென்றாவது ஏதாவதொரு தொழில்புரிந்து வருவதாகக் கூறவும் .. மனைவி இதனை மறுத்தாள் ..
நாம் என்னென்ன செய்கிறோமோ .. எதையெல்லாம் அடைகிறோமோ அவையெல்லாம் நம் முற்பிறவியின் கர்மவினைகளே ! ஒருவர் முற்பிறவியில் புண்ணியத்தை சேமித்து வைக்கவில்லையெனில் இவ்வாழ்க்கையில் எவ்வளவு கடுமையாக முயற்சி செய்தாலும் எதையும் அடையமுடியாது ..
ஒருவர் முற்பிறவியில் அறிவையோ செல்வத்தையோ தானம் செய்திருந்தால் இந்த வாழ்க்கையில் அதனை அடைவார் .. நாமோ முற்பிறவியில் தகுந்த நபருக்கு எந்தவொரு தானமும் செய்யவில்லை .. ஆகையால் தான் இப்பிறப்பில் இருவரும் சேர்ந்து துன்பப்பட வேண்டியுள்ளது என்று சொல்லும்பொழுதே கடவுள் அருளால் பெருமுனிவரான கவுன்தின்ய முனிவர் அங்கு வந்து சேர்ந்தார் .. அவரின் அறிவுரைப்படி லீப்வருடமாதத்தில் தேய்பிறையில் தோன்றும் ஏகாதசியாகிய “ பரம ஏகாதசியை “ கடைபிடித்தால் எல்லா பாவ விளைவுகளும் நீங்கும் .. ஏழ்மையையும் அது அழித்துவிடும் .. கடைபிடிப்பவரும் செழுமை அடைவர் என்பதனை கேட்டு இருவரும் அதனை அனுஷ்டித்தனர் ..
இந்த புனிதமான ஏகாதசியை முதலில் குபேரன் அனுஷ்டித்து செல்வந்தர் ஆகும் பயனை சிவபெருமான் குபேரனுக்கு அருளினார் .. 
ஹரிஸ்சந்திர மன்னர் தான் இழந்த ராஜ்ஜியத்தையும் மனைவியையும் மீண்டும் பெற்றார் ..
இவ்விரதத்தை நிறைவு செய்யும் தருணம் அந்நாட்டு இளவரசர் பகவான் பிரம்மாவால் ஊக்குவிக்கப்பட்டு அங்கு வந்து அவர்களுக்கு புதிய வீட்டை வழங்கி மேலும் ஒரு பசுவையும் அவர்களுக்கு கொடுத்துச் சென்றார் .. அதன் பயனாக இளவரசர் தன் வாழ்க்கை முடிந்ததும் விஷ்ணுவின் பரமத்தைச் சென்றடைந்தார்

இந்த ஏகாதசியின் பெருமைகளைப் படிப்போரும் பகவானின் அருட்கடாக்ஷத்தைப் பெறுவர் .. 
“ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


Image may contain: 1 person, standing

No comments:

Post a Comment