SWAMY SARANAM GURUVE SARANAM...Maheswari Somapalan 2 hrs · GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & A DIVINE FRIDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF MAA LAKSHMI .. MAY YOUR SOUL BRIGHTEN UP WITH JOY & YOUR HOME LIGHTEN UP WITH HER DIVINE BLESSINGS .. " JAI MAA LAKSHMI "




” திருவிளக்கை ஏற்றி வைத்தோம் ! 
அலைமகளே வருக ! ஐஸ்வர்யம் தருக 
வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லக்ஷ்மீகரம் 
அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்பமயம் 
அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் லக்ஷ்மீ மயம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் மங்களங்களை தங்கள் இல்லம்தோறும் வாரிவழங்கும் வெள்ளிக்கிழமையாகிய இன்று .. சகல சௌபாக்கியங்களும் பெற்று நல்லாரோக்கியத்துடனும் .. மகிழ்ச்சியோடும் வாழ அன்னை மஹாலக்ஷ்மியைப் பிரார்த்திப்போமாக !
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
விஷ்ணு பத்ந்யை ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!
திருமகள் எனப்படும் மஹாலக்ஷ்மி எப்போதும் ஓரிடத்தில் இலையாக இருப்பதில்லை .. “இது ஏன் “ என அந்த பரந்தாமனே ஒருமுறை அன்னையிடம் வினவ .. அதற்கு அன்னையும் -
“ தர்மம் செய்யாத கருமிகள் .. மிருகங்களை வதைப்பவர்கள் .. சூதாடிகள் .. குடிகாரர்களைக் கண்டாலே எனக்கு பிடிக்காது .. மற்றும் அதிகமாக கோபப்படுபவர்கள் .. பொய் சொல்பவர்கள் .. பொறாமைக்காரர்கள் .. தற்புகழ்ச்சி செய்து கொள்பவர்கள் .. தன்னிடம் பணம் உள்ளது என கர்வப்படுகிறவர்கள் .. ஏழைகளைக்கண்டும் மனம் இரங்காதவர்கள் போன்றோருக்கு எனது அருள் கிடைக்காது .. ஒருவேளை வினைப்பயனால் அது கிடைத்திருந்தாலும் அதுநிலைக்காது ! என்றாள் “ இதனைக்கேட்டு மகிழ்ந்த பரம்பொருள் .. 
“ இந்த அவநடத்தைகள் இல்லாதவர்களின் வீட்டில் மஹாலக்ஷ்மிகடாக்ஷ்ம் எப்போதுமே இருக்கும் “ என்று வரமளிக்கின்றேன் என்றாராம் !
இதைத்தான் வள்ளுவரும் கூறுகிறார் .. 
” அழக்கொண்ட எல்லாம் அழப்போம் ! 
இழப்பினும் பிற்பயக்கும் நற்பாலவை “ (குறள் 659)
பொருள் - பிறர் அழுமாறு துன்புறுத்திப் பெற்ற பொருட்கள் எல்லாம் .. தான் அழுமாறு தன்னை விட்டுப்போய்விடும் ! நல்வழியில் ஈட்டிய செல்வம் பறிபோனாலும் அது திரும்ப கிடைத்துவிடும் ..
அதேபோல வறியவர்களுக்கு தர்மம் செய்யாது சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனது செல்வம் கள்வர்களால் அபகரிக்கப்படும் இதையே தான் அன்னை ஔவை - 
“ ஈயார் தேட்டை தீயோர் கொள்வர் “ என்று கூறியுள்ளார் ..
ஆக அரும்பாடுபட்டு சேர்த்த செல்வத்தில் ஒரு சிறியபங்காவது தான தர்மங்கள் செய்துவரவேண்டும் அப்போதுதான் இருக்கும் செல்வம் விருத்தியடையும் எந்த சூழ்நிலையிலும் எவராலும் கவர முடியாது !
உங்கள் இல்லங்களில் லக்ஷ்மிகடாக்ஷ்ம் தழைத்து செல்வம் பெருக அன்னையைப் போற்றுவோம் ! 
“ ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மீ நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment