PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SRANAM.. GURUVE SARANAM.....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & A DIVINE ASHTAMI THITHI .. MAY LORD BHAIRAVA SAFEGUARD YOU FROM ALL THE EIGHT DIRECTIONS & BLESS YOU WITH BEST HEALTH .. PEACE & HAPPINESS TOO .. " JAI SHREE BHAIRAV DEV "




 வணங்குவோர்க்கு வாழ்வு தரும் 
வாழ்த்துவோர்க்கு வசதி தரும் 
போற்றுவோர்க்கு புகழ் தரும் 
தூற்றுவோர்க்கும் இன்பம் தரும் 
நினைத்தாலே இன்பம் தரும் 
நீடுவாழ் பைரவ சஷ்டி கவசமே ! 
சரணம் சரணம் பைரவா சரணம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் புதன்கிழமையாகிய இன்று நம் வாழ்வை வளமாக்கும் பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமித் திதியும் கூடிவருவது சிறப்பு .. வேண்டிய வரங்களை வேண்டியவாறே தந்தருளும் பைரவப் பெருமானைப் போற்றித் துதித்து .. மனபயம் நீங்கி .. செல்வச் செழிப்பு மேலோங்கவும் .. தடைகள் யாவற்றையும் தகர்த்தி வெற்றிகிட்டிடவும் காலபைரவரைப் பிரார்த்திப்போமாக !
ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே ! 
ஸூலஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !!
ஒவ்வொரு சிவாலயங்களிலும் உள்ள ஈசான்ய மூலையில் வடகிழக்கு திசையில் .. நாய்வாகனத்துடன் .. நீலநிற மேனியோடு காட்சி தருபவர் காலபைரவர் .. தினமும் காலையில் ஆலயம் திறக்கும்பொழுதும் பிறகு இரவு நடையை சாத்தும் பொழுதும் காலபைரவருக்கு தனிபூஜை நடத்தவேண்டும் என்பது ஆலயங்களின் நித்ய பூஜாவிதிகளில் ஒன்று ..
நம் கர்மவினைகளைப் போக்கும் காலபைரவருக்கு பிரதிமாதம் பௌர்ணமிக்குப் பின்வரும் தேய்பிறை அஷ்டமி விசேஷமான நாளாகும் .. அன்று அனைத்து சிவாலயங்களிலும் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் ..
எம்பெருமான் சிவபெருமானின் ஒரு அம்சமாக எழுந்தவரே ஸ்ரீபைரவ மூர்த்தியாவார் .. காலம் .. தேசம் என்று இரண்டு தத்துவங்களை அடிப்படியாக வைத்து நமது பூலோகம் இயங்குவதால் கால தத்துவத்தின் வெளிப்பாடாக அருளும் மூர்த்தியே 
“காலபைரவ மூர்த்தியாவார் “ .. பூலோக ஜீவன்களைப் பொறுத்தவரை காலபைரவ வழிபாடும் .. பைரவமூர்த்தியின் வழிபாடும் ஒரேவிதமான பலன்களை அளிக்கக்கூடியதே !
கலியுகத்துக்கு காலபைரவர் என்றொரு வாசகம் உண்டு .. எந்தவொரு மனக்கிலேசமும் .. மனக்குழப்பம் என்றெல்லாம் காலபைரவரை வழிபட்டால் நம் கவலைகளையெல்லாம் தீர்த்துவைப்பார் .. வீட்டில் உள்ள தாரித்திர நிலை விலகும் .. கடன் தொல்லையிலிருந்து காலபைரவர் மீளச்செய்வார் .. கவலைகள் பறந்தோடும் என்கின்றனர் பக்தர்கள் ..
தன்னை அண்டியவர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீபைரவரைப் போற்றுவோம் ! தீராத வினைகள் யாவும் தீர்த்து வைப்பார் ! 
“ ஓம் ஸ்ரீபைரவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 Image may contain: 1 person

No comments:

Post a Comment