GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD MURUGA .. MAY HE FULFILL ALL YOUR WISHES & RELIEVE YOU FROM STRESS & SORROWS .. " OM MURUGASwamy Saranam and Guruve Saranam...

 நாளென்செயும் வினைதானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயும் கொடுங்கூற்றென் செயும் குமரேசரிரு தாளும் சிலம்பும் சலங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாம் கந்தப்பெருமானுக்கு உகந்த நாளுமாகும் .. தங்களனைவரும் கந்தனின் அருட்கடாக்ஷ்ம் பெற்று .. தீமைகளிலிருந்தும் எமை காத்தருளி .. வேண்டிய வரங்களை வேண்டியவாறே தந்தருளும்படி பிரார்த்திப்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் .. பூமியினால் தீராத பிரச்சினைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்துவந்தால் விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும் ..
செந்தமிழுலகில் கற்றோர் முதல் மற்றோர்வரை அனைவரும் எதற்கெடுத்தாலும் ”முருகா ! முருகா” என்று சொல்லுவதைக் காண்கின்றோம் .. 
தனிவழி நடந்தால் முருகா ! தலைவலித்தாலும் முருகா ! பாம்பைக்கண்டாலும் .. பயங்கண்ட இடத்திலெல்லாம் முருகா ! விளையாட்டு வீரர்களும் வெற்றிக்காக முருகனை வேண்டிக்கொள்கின்றனர் .. வழக்கு வெல்ல .. போர் வெல்ல .. பேச்சு சிறக்க ..பணம் திரட்டச் செல்கின்றவர்களும் செவ்வேள் திருவடித் துணையைப் பற்றியே செல்கின்றனர் ..
“ தனிவழிக்குத் துணை செங்கோடன் வடிவேலும் மயூரமுமே ” என்று நமக்கு வழிகாட்டியிருக்கின்றார்கள் நம் முன்னோர்கள் .. நோயாலும் .. பேயாலும் நொந்தவர்களுக்கு உறுதுணையாக இருப்பவன் முருகனே ! 
முருகனைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களைப் பெற்றிடுவோம் !
“ ஓம் சரவணபவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..



Image may contain: 3 people

No comments:

Post a Comment