கோலாலமாகிக் குரைகடல்வாயென்றெழுந்த
ஆலால முண்டாவைன் சதுர்தானென்னேடி
ஆலால முண்டிலனேல் அயன்மாலுள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவகாண் சாழலோ “
(மாணிக்கவாசகர்)
ஆலால முண்டாவைன் சதுர்தானென்னேடி
ஆலால முண்டிலனேல் அயன்மாலுள்ளிட்ட மேலாய தேவரெல்லாம் வீடுவகாண் சாழலோ “
(மாணிக்கவாசகர்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் செவ்வாய்க்கிழமையாகிய இன்று எல்லாம் வல்ல ஈஸ்வரனுக்கு உகந்த “ பிரதோஷ “ தினமும் கூடிவருவது சிறப்பாகும் .. ரணமும் .. ருணமும் செவ்வாயால் வரும் கெடுபலன்கள் யாவும் நீங்கி சுபீட்சமான வாழ்வுதனை பெற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
பிரதோஷம் என்றால் - சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டரானது இந்தப்பிரதோஷ நேரத்தில்தான் .. தேவர்களும் .. அசுரர்களும் போட்டிபோட்டுக்கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது .. திருமகள் .. ஐராவதம் .. காமதேனு .. கற்பத்தரு .. சிந்தாமணி .. கௌலஸ்துபமணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின ..
லக்ஷ்மியைத் திருமால் ஏற்றுக்கொண்டார் .. மற்றபொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக்கொண்டனர் .. ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது .. இதைக்கண்டு தேவர்களும் .. முனிவர்களும் பெரிதும் நடுங்கினர் ..
சிவபெருமான் ஆலகால விஷத்தை அடியவர்களான அமரர்கள் உய்ய அமுதம்போல் உண்டருளினார் .. அந்த விஷம் உள்ளே சென்றால் உள்முகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்துவிடும் ..
உமிழ்ந்தால் வெளிமுகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்துவிடும் ..
ஆதலால் உண்ணாமலும் .. உமிழாமலும் இருக்க கருணையே வடிவமான .. அனைத்து உயிர்களுக்கும் அன்னையாக இருக்கும் பார்வதிதேவி இறைவன் கண்டத்தில் கைவைத்து மேலேயும் வராமல் .. கீழேயும் போகவிடாமல் தடுத்தாட்கொண்டாள் .. அதனால் இறைவனுடைய கழுத்தானது நீலநிறமாக மாறி “ நீலகண்டன் “ எனப் பெயர்பெற்றார் .. இந்நேரம்தான் பிரதோஷகாலம் என்று வணங்கப்படுகிறது .. (மாலை 4.30 - 6.00 மணிவரையிலான காலநேரம்)

நந்திதேவரது தீபாரதனைக்குப்பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே கண்டு தரிசிக்க .. நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும் .. சிவபெருமானையும் நந்தீஸ்வரரையும் போற்றுவோம்
அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபடுவோமாக !
“ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுபடுவோமாக !
“ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment